INDvsRSA : டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக திடீரென விலகிய நட்சித்திர வீரர் – வெளியான அறிவிப்பு

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் 26-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து தற்போது ஒரு வழியாக போட்டியானது நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் தற்போது மற்றொரு வீரராக தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்கியா இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

அதன்படி தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆன்ரிச் நோர்கியா ஏற்பட்டுள்ள நிலையான காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

nortje

அதுமட்டுமின்றி மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நிலையாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது வேகத்தின் மூலம் பயத்தை காட்டிவந்த இவர் சொந்த மண்ணில் இன்னும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். இந்நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு ஒரு கூடுதல் அனுகூலத்தை தந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்கலாம் ஒரு கேப்டனா. இப்படித்தான் பொறுப்பில்லாம பேசுவீங்களா ? – விட்டு விளாசிய பாண்டிங்

இப்படி ஒரு சூழலில் தற்போது முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளதாக பலரும் கூறி வந்தநிலையில் இவரது விலகலும் இந்திய அணிக்கு தற்போது ஒரு கூடுதல் பலமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement