TNPL 2023 : ஜோடி போட்டு அடித்த திண்டுக்கல் ஜோடி, பேட்டிங்கில் அசத்தியும் திருப்பூர் வீழ்ந்தது எப்படி?

- Advertisement -

தமிழகத்தின் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 28ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற 20வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேலத்தில் இருக்கும் எஸ்சிஎப் மைதானத்தில் மழையால் சற்று தாமதமாக துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய திருப்பூருக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ராதாகிருஷ்ணன் தடுமாறி 10 (16) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய துஷார் ரஹீஜா 30 (22) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் மிடில் ஓவர்களில் நங்கூரமாகவும் அதிரடியாக செயல்பட்டு 3வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியில் சாய் கிஷோர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 45 (35) ரன்களில் அவுட்டாக மறுபுறம் 2 பவுண்டரி 2 சிக்சரைப் பறக்க விட்ட விஜய் சங்கர் 43 (27) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அவர்களை விட கடைசி நேரத்தில் பாலச்சந்தர் அனிருத் மிரட்டலாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (12) ரன்களும் ராஜேந்திரன் விவேக் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17* (8) ரன்களும் எடுத்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் திருப்பூர் 173/5 ரன்கள் எடுக்க திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சரவணகுமார் மற்றும் ஆர் ஆயுசிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 174 ரன்களை துரத்திய திண்டுக்கல்லுக்கு ஒருபுறம் சிவம் சிங் அதிரடியை துவங்கமறுபுறம் சற்று தடுமாறிய விமல் குமார் 14 (13) ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பூபதி குமார் அதிரடியாக விளையாட முயற்சித்து 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 (12) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சிவம் சிங் அடுத்து வந்த ஆதித்யா கணேஷ் உடன் ஜோடி சேர்ந்து நிதானம் கலந்த அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

அதில் ஆதித்யா கணேஷ் சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்த நிலையில் மறுபுறம் சீரான வேகத்தில் செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் சிவம் சிங் அரை சதம் கடந்து திண்டுக்கல்லை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். நேரம் செல்ல செல்ல மிடில் ஓவர்கள் முழுவதும் விக்கெட் விடாமல் நங்கூரமாக நின்று திருப்பூருக்கு மிகப்பெரிய சவாலாக மாறிய இந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக வெற்றி பெற வைத்தது.

குறிப்பாக இந்த சீசனில் முதல் முறையாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையைப் பெற்ற அவர்களில் சிவம் சிங் 11 பவுண்டரியுடன் 74* (57) ரன்களும் எடுத்தார்.  அவரை விட ரசிகர்களை மகிழ்வித்து அதிக அதிரடியாக விளையாடிய ஆதித்யா கணேஷ் அரை சதம் கடந்து 5 பவுண்டரியுடன் 3இல் 2 அடுத்தடுத்த சிக்ஸர்களை கடைசி நேரத்தில் விளாசி 59* (30) ரன்கள் அடித்து சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அதனால் 18.3 ஓவரிலேயே 174/2 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் நல்ல ரன்களை எடுத்தும் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட திருப்பூர் சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க:2023 உலக கோப்பை செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எது? இப்போதே தரமான கணிப்பை வெளியிட்ட சேவாக்

இந்த வெற்றியால் பங்கேற்ற 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த திண்டுக்கல் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மறுபுறம் 4 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த திருப்பூர் 6வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement