2023 உலக கோப்பை செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எது? இப்போதே தரமான கணிப்பை வெளியிட்ட சேவாக்

Virender Sehwag
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன் கடந்த 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து இத்தொடரை நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இம்முறை முழுவதுமாக தங்களுக்கு சொந்த மண்ணில் நடத்துவது சிறப்பம்சமாகும். அந்த நிலையில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் 10 வருடமாக சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் முதலில் நாக் அவுட் சுற்றுக்கு செல்லுமா என்று பாருங்கள் என சில இந்திய ரசிகர்களே பேசும் அளவுக்கு சமீப காலங்களில் இந்திய அணியின் செயல்பாடுகள் மோசமாக இருந்து வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் மண்ணை கவ்விய இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் மெகா தோல்வியை சந்தித்தது.

சேவாக்கின் டாப் 4:
மேலும் கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளிலிருந்து பாடத்தை கற்காமல் அஸ்வின் போன்ற வீரர்களை கழற்றி விட்டு சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்காதது சுமாராக செயல்படும் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ரோகித் சர்மா போன்றவர்கள் முக்கிய போட்டியில் கைவிடுவது போன்ற சொதப்பல்கள் இந்திய அணியில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இந்த குறைகள் இருந்தாலும் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியா நிச்சயம் அரையிறுதியில் ஒரு அணியாக இருக்கும் என்று முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

ENg vs AUs Steve SMith Ben Stokes

அதே போல் வெற்றிகரமான ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் அண்டை நாடான பாகிஸ்தானும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரிவிக்கும் அவர் இந்த உலகக் கோப்பை அட்டவணை வெளியீட்டு விழாவில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த தொடரின் டாப் 4 அணிகளை நான் தேர்வு செய்ய வேண்டுமெனில் அது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். இந்த அணிகள் தான் செமி ஃபைனலில் விளையாடுவார்கள்”

- Advertisement -

“குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நிச்சயமாக தகுதி பெறும். ஏனெனில் அவர்கள் இந்த கிரிக்கெட்டை விளையாடும் விதம் அதிரடியாக இருப்பதுடன் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான ஷாட்களை விளையாடுகின்றனர். எனவே வழக்கத்திற்கு மாறாக விளையாடும் தன்னை கொண்ட இவ்விரு அணிகளும் புதிதாக விளையாடுவதில் மிகவும் சிறந்தவையாக இருக்கின்றன. அத்துடன் இந்திய துணை கண்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து எப்போதுமே சிறப்பாக செயல்படும் வெளிநாட்டு அணிகளாகவும் இருக்கின்றன” என்று கூறினார்.

Sehwag

அவர் கூறுவது போல கடந்த பிப்ரவரியில் இந்தியாவையே அதன் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்த ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 உலகக் கோப்பைகளை வென்ற வலுவான அணியாக திகழ்கிறது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இத்தொடரில் இந்தியாவை சொந்த மண்ணில் துவம்சம் செய்யும் அளவுக்கு திறமை கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Ashes 2023 : 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த பவுலரும் செய்யாத தனித்துவமான சாதனை படைத்த நேதன் லயன்

மறுபுறம் கிட்டத்தட்ட தங்கள் நாட்டில் நிலவும் அதே கால சூழ்நிலைகள் தான் இந்தியாவில் இருக்கும் என்பது பாகிஸ்தானுக்கு சாதகமாகும். மேலும் பாபர் அசாம் தலைமையில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கும் பாகிஸ்தான் எல்லை பிரச்சினைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் சாதித்து காட்ட போராடும் என்று நம்பலாம்.

Advertisement