பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய டெல்லி பெரிய வெற்றி! குவியும் பாராட்டு – எதற்கு தெரியுமா?

DC vs PBKS 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கடந்த போட்டியில் காயத்தால் விலகியிருந்த கேப்டன் மயங்க் அகர்வால் அணிக்கு திரும்பிய தொடக்க வீரராக களமிறங்க அவருடன் ஷிகர் தவான் களமிறங்கினார். முதல் ஒருசில ஓவர்களிலேயே அதிரடி காட்டிய கேப்டன் மயங்க் அகர்வால் 15 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததுமே பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

Liam Livingstone 2.jpeg

- Advertisement -

ஏனெனில் எதிர்ப்புறம் அபாரமாக பந்துவீசிய டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சில் சிக்கிய ஷிகர் தவான் 9 (10) ரன்களில் அவுட்டாக அந்த அணி பெரிதும் நம்பியிருக்கும் லியம் லிவிங்ஸ்டன் 2 (3) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மேலும் அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 9 (8) ரன்களில் நடையை கட்டியதால் 54/4 என ஆரம்பத்திலேயே படுமோசமான தொடக்கத்தை பஞ்சாப் பெற்றது.

டெல்லியில் சுழல் ஜாலம்:
அந்த நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 23 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தமிழக வீரர் சாருக்கானும் 12 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இப்படி அனைத்து முக்கிய வீரர்களும் டெல்லியின் மாயாஜால சுழல்பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் 115 ரன்களுக்கு சுருண்டது. இது இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யப்பட்ட மிக குறைந்த ஸ்கோராகும்.

Dc

டெல்லி சார்பில் அபாரமாக பந்துவீசிய கலீல் அஹமது, லலித் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகிய 4 பவுலர்கள் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து பஞ்சாப்பின் கதையை முடித்தார்கள். அதை தொடர்ந்து 116 என்ற எளிமையான இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரிதிவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடி சரவெடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டனர்.

- Advertisement -

டெல்லி மாஸ் வெற்றி:
குறைந்த இலக்கு தானே மெதுவாக விளையாடலாம் என்று நினைக்காத இந்த ஜோடி ஏற்கனவே பேட்டிங்கில் சொதப்பிய காரணத்தால் சோர்வாக பந்துவீசிய பஞ்சாப் வீரர்களை புரட்டி எடுத்து அதிரடி கலந்த பட்டாசான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதிலும் 83 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை முடித்து விட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு வெறித்தனமாக விளையாடிய இந்த ஜோடியில் 20 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 41 ரன்கள் எடுத்து பிரிதிவி ஷா ஆட்டமிழந்தார்.

David Warner 3

ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அடம்பிடித்த டேவிட் வார்னர் தனது பங்கிற்கு வெறும் 30 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 60* ரன்களை விளாசி அதிரடியான பினிஷிங் கொடுத்து போட்டியை முடித்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் வெறும் 10.3 ஓவர்களிலேயே 119/1 ரன்களை எட்டிய டெல்லி 57 பந்துகளை மீதம் வைத்து அதிரடியான மாஸ் வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப் பந்துவீச்சிலும் வெற்றிக்காக போராடாமல் படுதோல்வியை சந்தித்து இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

டெல்லிக்கு பாராட்டு:
இந்த அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த டெல்லி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்ததுடன் இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக கூடுதல் ரன்ரேட்டை பெற்று அதே 6 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளை புறம்தள்ளி புள்ளி பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் அந்த அணி அதிரடியாக விளையாடி வெற்றியை பதிவு செய்த விதம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

DC

ஏனெனில் தனது கடந்த சில போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து திண்டாடிக் கொண்டிருந்த அந்த அணிக்கு முக்கிய வீரர் மிட்சேல் மார்ஷ் மற்றும் ஒருசில பயிற்சியாளர்களும், மருத்துவர்களும் கரோனா காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மேலும் பின்னடைவை கொடுத்தது. அதன் காரணமாகவே பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உட்பட அந்த அணியை சேர்ந்த பலரும் நேற்று மாஸ்க் அணிந்து கொண்டு மைதானத்தில் போட்டியை பார்த்தனர்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியை விட மும்பை ரொம்ப பாவம் போல. முக்கிய வீரர் விலகல் – என்ன ஆனது?

மேலும் மிட்செல் மார்ஷ் மற்றும் ஆன்ரிச் நார்ட்ஜே போன்ற ஒருசில முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போதிலும் இருக்கும் வீரர்களை வைத்து அபாரமாக செயல்பட்ட டெல்லி அற்புதமான வெற்றியை பதிவு செய்து தனக்குத்தானே புத்துணர்ச்சி அடைந்துள்ளது.

Advertisement