சி.எஸ்.கே அணியை விட மும்பை ரொம்ப பாவம் போல. முக்கிய வீரர் விலகல் – என்ன ஆனது?

Mills-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிக்கு மிகுந்த சோதனை அளித்து வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் வழக்கமாக ஐபிஎல் வரலாற்றில் ஆண்டுதோறும் புள்ளிப் பட்டியலில் மிக பலத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி வீறுநடை போடும் இவ்விரு அணிகளும் இந்த ஆண்டு புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது அவர்களது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

mumbai indians

- Advertisement -

சென்னை அணி கூட 6 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று 9-வது இடத்தை வகிக்கும் வேளையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியானது தாங்கள் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 10-வது இடத்தில் உள்ளது. இதன்காரணமாக கிட்டத்தட்ட இந்தாண்டு அவர்களது பிளேஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது என்றே சொல்லலாம்.

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் சந்திக்காத தொடர் தோல்விகளை தற்போது மும்பை அணி சந்தித்து வருகிறது. மும்பை அணியின் இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் உருவாக்கிய பல இளம் வீரர்களை தற்போது அந்த அணி இழுந்துள்ளது. அதுமட்டுமின்றி மெகா ஏலத்தின் போது கூட சரியான வீரர்களை தேர்வு செய்யாதது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

mills

தற்போதுள்ள மும்பை அணியின் பேட்டிங் ஓரளவு பலம் பெற்று இருந்தாலும் பந்துவீச்சில் பும்ரா தவிர்த்து வேறு எந்த வீரரும் தங்களது பங்களிப்பை சரிவர வழங்கவில்லை. தமிழக வீரர் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் சற்று ஆறுதல் அளித்து வரும் வேளையில் பும்ராவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது இல்லை என்றே கூறலாம்.

- Advertisement -

மும்பை அணியில் ஆர்ச்சர் இருந்தாலும் அவர் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் மும்பை அணிக்கு அடி விழும் வகையாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் ஒரு இலங்கை வீரரை அணியில் சேர்த்த சி.எஸ்.கே நிர்வாகம் – ரசிகர்கள் ஆவேசம் (யார் அந்த வீரர்?)

இங்கிலாந்தை சேர்ந்த 29 வயதான டைமல் மில்ஸ் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது பந்து வீச்சு இந்த சீசனில் எடுபடாத நிலையில் தற்போது காயம் காரணமாக அவரும் விலகியுள்ளது மும்பை அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement