மீண்டும் ஒரு இலங்கை வீரரை அணியில் சேர்த்த சி.எஸ்.கே நிர்வாகம் – ரசிகர்கள் ஆவேசம் (யார் அந்த வீரர்?)

CSK
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது இதுவரை சிஎஸ்கே அணிக்கு சிறப்பான ஒன்றாக அமையவில்லை. ஏனெனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று உள்ளதால் கிட்டத்தட்ட சென்னை அணியின் பிளேஆப் வாய்ப்பு தற்போது மங்கி உள்ளதாக தெரிகிறது.

CSK vs RCB 2

- Advertisement -

இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் சென்னை அணி எவ்வாறு இந்த சூழலை சமாளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் சென்னை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதற்கு சரியான வீரர்களை தேர்வு செய்யாதது, முக்கிய வீரர்களின் பங்களிப்பு சரியாக இல்லாமல் போனது, அணியில் தேர்வான சிலர் காயம் காரணமாக வெளியேறியது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக சென்னை அணியின் முக்கிய வீரரான தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறாதது பெரிய பின்னடைவாக அமைந்தது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக பல வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்தும் ஜடேஜா மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் வீரரான டேவான் கான்வேவும் தனது திருமணம் காரணமாக தற்காலிகமாக சென்னை அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

pathirana

இந்நிலையில் அடுத்ததாக சென்னை அணிக்கு ஒரு இழப்பாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இவருக்கு பதிலாக மாற்று வீரராக இலங்கையைச் சேர்ந்த 19 வயது வீரர் மதிஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இந்த சேர்க்கை தற்போது சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவும், விமர்சனத்திற்கு ஒன்றான விடயமாகவும் மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே சென்னையில் தீக்ஷனா என்கிற இலங்கை வீரர் விளையாடி வரும் வேளையில் சென்னை ரசிகர்கள் தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது ஏன்? என்ற கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இலங்கை வீரருக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : ப்ராபோர்ன் மைதானத்துக்கு எவன் வந்தாலும் வெட்டுவோம் ! கெத்து காட்டும் டெல்லி – என்ன நடந்தது?

இப்படி தொடர்ச்சியாக தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இலங்கை வீரர்களை ஆதரிப்பது ஏன்? என்பது போன்ற நோக்கில் தொடர்ந்து சென்னை ரசிகர்கள் தங்களது ஆவேசமான கேள்விகளை சமூகவலைதளத்தின் மூலமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement