4, 6, 4, 6.. கடைசி ஓவரில் வெளுத்த தல தோனி.. ரகானே, மிட்சேல் போராடியும் 2 தவறால் சிஎஸ்கே தோற்றது எப்படி?

CSK vs DC
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதில் டேவிட் வார்னர் அரை சதமடித்து 52 (35) ரன்கள் குவித்து பதிரனாவின் அபார கேட்ச்சால் அவுட்டாக அடுத்த சில ஓவரில் பிரிதிவி ஷா 43 (27) ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அப்போது வந்த மிட்சேல் மார்ஷ் 18, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 0 ரன்களில் பதிரனாவின் மிரட்டலான யார்கர் பந்துகளால் ஒரே ஓவரில் அவுட்டானார்கள். இருப்பினும் 3வது இடத்தில் களமிங்கி நிதானமாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 51 (32) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

போராடிய சென்னை:
அதனால் 20 ஓவரில் டெல்லி 191/5 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 192 ரன்களை சேசிங் செய்த சென்னைக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ருதுராஜை 1 (2) ரன்னில் காலி செய்த கலீல் அகமது மறுபுறம் திண்டாட்டமாக விளையாடிய ரச்சின் ரவீந்தராவை 2 (12) ரன்களில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.

அதனால் 7/2 என ஆரம்பத்திலேயே திண்டாட்டிய சென்னைக்கு அடுத்ததாக ரகானேவுடன் சேர்ந்த டேரில் மிட்சேல் 3வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு சரிவை சரி செய்து 34 (26) ரன்களில் அவுட்டானார். அப்போது இம்பேக்ட் வீரராக வந்த சிவம் துபேவும் தடுமாறிய நிலையில் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடி போராடிய ரகானேவும் 45 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது வந்த சமீர் ரிஸ்வி கோல்டன் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்த சில ஓவரில் துபேவும் 18 (17) ரன்களில் அவுட்டானதால் சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது ஜடேஜாவும் தடுமாற்றமாக 21 (17) ரன்கள் எடுத்துப் போராடினார். அதே போல கடைசி நேரத்தில் வந்த எம்எஸ் தோனி 20வது ஓவரில் அன்றிச் நோர்ட்ஜெவுக்கு எதிராக 4, 6, 4, 6 என 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டார்.

அந்த வகையில் ரசிகர்களுக்கு 37* (16) ரன்களை 231.25 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து விருந்து படைத்து போராடிய அவரால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. ஏனெனில் அவருடைய அதிரடியை தாண்டியும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை போராடி தோற்றது. மறுபுறம் 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட் கீப்பராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய தல தோனி – அசத்தல் விவரம் இதோ

ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் பவர்ப்ளே ஓவரில் 65 ரன்களை வாரி வழங்கிய சென்னைக்கு ஓப்பனிங்கில் அடித்து நொறுக்க வேண்டிய கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்ததனர். மேலும் மிடில் ஆர்டரில் சமீர் ரிஸ்வி டக் அவுட்டானதும் சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒருவேளை அவர்கள் 5, 10 ரன்கள் எடுத்திருந்தால் கூட இவ்வளவு போராடிய சென்னை கடைசியில் தோனியின் உதவியுடன் வென்றிருக்கும். இருப்பினும் இளம் வீரர் செய்த சிறிய தவறால் சென்னை முதல் தோல்வியை பதிவு செய்தது.

Advertisement