டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட் கீப்பராக வரலாற்று சாதனையை நிகழ்த்திய தல தோனி – அசத்தல் விவரம் இதோ

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 17-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் இந்த தொடரானது தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதோடு இந்த சீஸனின் இறுதியில் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்பதனாலே தனது கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ருதுராஜ் கேப்டனாகவும், தோனி ஒரு முழுநேர விக்கெட் கீப்பராகவும் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் 13-ஆவது லீக் போட்டி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வேளையில் டி20 கிரிக்கெட்டில் முதல் விக்கெட் கீப்பராக தோனி மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அந்தவகையில் நடைபெற்று வரும் இந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியில் அந்த அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா கொடுத்த கேட்சை பிடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மட்டும் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் விக்கெட் கீப்பராக தோனி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதில் தோனி 213 வீரர்களை கேட்ச் மூலமாகவும், 87 வீரர்களை ஸ்டம்பிங் மூலமாகவும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோர் 274 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளனர்.

இதையும் படிங்க : சமூகவலைதளத்திலும் ஆர்.சி.பி மற்றும் மும்பை அணிகளை பின்னுக்கு தள்ளிய சி.எஸ்.கே – விவரம் இதோ

இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை சி.எஸ்.கே அணி விளையாடிய 2 போட்டிகளிலும் பேட்டிங் செய்ய களத்திற்கு வராத தோனி இன்று நடைபெறும் இந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியில் 8 ஆவது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement