சமூகவலைதளத்திலும் ஆர்.சி.பி மற்றும் மும்பை அணிகளை பின்னுக்கு தள்ளிய சி.எஸ்.கே – விவரம் இதோ

CSK
- Advertisement -

17 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளாக இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பார்க்கப்பட்டு வந்தன. அதேபோன்று இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றாத ஆர்.சி.பி அணிக்கும் சமூகவலைத்தளம் வாயிலாக அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடர் நடைபெறும் போதும் இந்த 3 அணிகளுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அந்தவகையில் இந்த ஆண்டும் நடப்பு 17-ஆவது ஐ.பி.எல் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து மும்பை அணியின் ரசிகர்கள் அந்த அணியை சமூகவலைத்தளத்தில் பின்தொடர்வதை கணிசமாக குறைத்து விட்டனர். அதோடு பாண்டியாவிற்கு எதிராகவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை வருடா வருடம் தோனிக்காகவே ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமூகவலைதள பக்கமான இன்ஸ்ட்டாகிராமிலும் சி.எஸ்.கே அணியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு அதிக ரசிகர்களை கொண்ட அணியாக சி.எஸ்.கே சாதனை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்தவகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பாலோவர்களை கொண்ட முதல் அணியாக சி.எஸ்.கே அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. அவர்களுக்கு அடுத்து 13.5 மில்லியன் பாலோவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : 150 கி.மீ வேகத்தில் பறந்த ஸ்டம்ப்ஸ்.. தல தோனியை இம்ப்ரெஸ் செய்த பதிரான மாஸ் கேட்ச்.. ரிஷப் பண்ட் அசத்தல்

அதேபோன்று ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களின் எண்ணிக்கை குறைய துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 13.2 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement