150 கி.மீ வேகத்தில் பறந்த ஸ்டம்ப்ஸ்.. தல தோனியை இம்ப்ரெஸ் செய்த பதிரான மாஸ் கேட்ச்.. ரிஷப் பண்ட் அசத்தல்

Pathirana vs DC
- Advertisement -

கோலகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் நகரில் 13வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. ஏற்கனவே விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த டெல்லி அப்போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக 5 மற்றும் 6வது ஓவரில் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி பவர் பிளே முடிவில் 65 ரன்கள் குவித்து டெல்லிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தது. அதே வேகத்தில் 9.3 ஓவர்கள் வரை அட்டகாசமாக விளையாடி 93 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் டேவிட் வார்னர் அரை சதமடித்து அறுத்தலை கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய பதிரனா:
அப்போது முஸ்தஃபீசூர் ரஹ்மான் வேகத்தில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை அடித்த டேவிட் பவுண்டரியை பறக்க விட முயற்சித்தார். ஆனால் அதை உள்வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த பதிரனா காற்றில் தாவி அபாரமாக பிடித்து டேவிட் வார்னரை 52 (35) ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். அவருடைய கேட்ச்சை பார்த்து இம்ப்ரெஸான தோனி சிரித்து முகத்துடன் கைதட்டி பாராட்டினார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் சவாலை கொடுத்த பிரத்வி ஷா 43 (27) ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கினார். அந்த நிலைமையில் வந்த மிட்சேல் மார்ஷை 18 (12) ரன்களில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் யார்கர் பந்தால் போல்ட்டாக்கிய பதிரனா அடுத்ததாக வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸை 149 கிலோ மீட்டர் வேக யார்கர் பந்தை வீசி கிளீன் போல்ட்டாக்கி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதனால் 3வது இடத்தில் களமிறங்கியிருந்த கேப்டன் ரிஷப் பண்ட் மெதுவாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய அவர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் காயத்திலிருந்து வந்த பின் முதல் முறையாக அரை சதமடித்து 51 (32) ரன்களில் பதிரனா வேகத்தில் அவுட்டானார். இறுதியில் அக்சர் பட்டேல் 7*, அபிஷேக் போரேல் 9* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் டெல்லி 190/5 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: தலையீடு குறைஞ்சுடுச்சு.. இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு சாஸ்திரி சோகமான தகவல்

சொல்லப்போனால் வார்னர் – ஷா ஆட்டத்தால் 200 ரன்கள் தொட வேண்டிய அந்த அணியை கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி கடிவாளம் போட்ட சென்னை 10 – 20 ரன்கள் குறைவாகவே கட்டுப்படுத்தியது என்று சொல்லலாம். அந்தளவுக்கு அசத்திய சென்னைக்கு அதிகபட்சமாக மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

Advertisement