நீங்க எவ்ளோ பெரிய பேட்ஸ்மேனா இருந்தாலும் அதுக்கு மரியாதை கொடுங்க.. ரோஹித், சூரியகுமாரை விமர்சித்த சேவாக்

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9வது தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக மே பதினொன்றாம் தேதி நடைபெற்ற 60வது லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றது. மழையால் 16 ஓவர்களாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 157/7 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42, நிதிஷ் ராணா 33 ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக வழக்கம் போல பும்ரா 2, பியூஸ் சாவ்லா 2 இக்கட்டுகள் எடுத்தனர். ஆனால் அதைத்தொடர்ந்து 158 ரன்களை துரத்திய மும்பை தடுமாற்றமாக விளையாடி 16 ஓவரில் 139/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு ரோஹித் சர்மா 19, சூரியகுமார் யாதவ் 11, கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
அதனால் இசான் கிசான் 40, திலக் வர்மா 32 ரன்கள் எடுத்தும் மும்பை பரிதாபமாக தோற்றது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரே ரசல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையும் சேர்த்து மொத்தம் 9 வெற்றிகளை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் மும்பை அணியின் நாயகன் ரோகத் சர்மா மற்றும் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அதிக பந்துகள் எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் தரமான பந்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களை வீரந்தர சேவாக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“யார் நன்றாக பந்து வீசினாலும் அவர்களை நீங்கள் மதித்து விளையாட வேண்டும். ஒருவேளை 2 விக்கெட்டுகள் விழாமல் போயிருந்தால் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் ஒரு ஓவர் முன்னதாகவே போட்டியை முடித்திருப்பார்கள். இருப்பினும் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ரசல், ஸ்டார்க் ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள். எனவே நீங்கள் ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விக்கெட்டை விடாமல் விளையாடியிருந்தால் மும்பை வென்றிருக்கும்”

இதையும் படிங்க: ரோஹித்தை அவுட்டாக்கிய பிளான் இது தான்.. மும்பையை வீழ்த்திய தமிழக ஆட்டநாயகன் வருண் பேட்டி

“நீங்கள் பேட்டிங் செய்ய வரும் போது ஈகோவுடன் வரக்கூடாது. ஒன்று சாதாரணமாக எதிர்கொள்ள வேண்டும் அல்லது மோசமான பந்தை தண்டிக்க வேண்டும். ஆனால் நன்கு செட்டிலான பின்பும் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் குறைந்தது 5 பவுண்டரிகள் அடித்திருக்க வேண்டும். நீங்கள் ரோகித் சர்மா அல்லது சூரியகுமாராக இருக்கலாம். ஆனால் பவுலரை மதிக்காவிட்டாலும் குறைந்தது நீங்கள் நல்ல பந்துகளை மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement