சூர்யகுமார் யாதவ் ஒரு 360 டிகிரி பிளேயர்.. அவரை வீழ்த்த நான் போட்ட பிளான் இதுதான் – ஆண்ட்ரே ரசல் பேட்டி

Russell
- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியில் மும்பை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்ததோடு மட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் இதுவரை 18 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருப்பதினால் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு பெரியளவு வாய்ப்பு உள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 16 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்ததால் 18 என்று வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்கையில் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ரானா ஆகியோர் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தாலும் பின் வரிசையில் களமிறங்கிய ரசல் 14 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 24 ரன்கள் அடித்து ரன் குவிப்பின் வேகத்தை அதிகப்படுத்தினார்.

இப்படி பேட்டிங்கில் அசத்தியதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ஆண்ட்ரே ரசல் மும்பை அணியின் அதிரடி வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவரது விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த ரசல் கூறுகையில் : நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது மைதானத்தின் தன்மை எவ்வாறு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே இரண்டாவது பாதியில் ஸ்பின்னர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த வகையில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி மும்பை அணியை கட்டுப்படுத்தினர்.

இதையும் படிங்க : ரோஹித்தை அவுட்டாக்கிய பிளான் இது தான்.. மும்பையை வீழ்த்திய தமிழக ஆட்டநாயகன் வருண் பேட்டி

சூர்யகுமார் யாதவ் ஒரு 360 டிகிரி பிளேயர் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே அவருக்கு எதிராக வித்தியாசமாக பந்து வீசாமல் சிம்பிளாக பந்து வீசினால் விக்கெட்டை எடுக்க முடியும் என்று நினைத்தேன். அந்த வகையில் தான் எந்த வியூகத்தையும் அமைக்காமல் சாதாரணமாக பந்துவீசியே அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். எங்களது அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என ரசல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement