ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் விலைக்கு வாங்க முயன்ற அணி.. பேச்சு வார்த்தை பெயிலியர் – எந்த அணி தெரியுமா?

Rohit
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவை 15 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் தற்போது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா அறிவித்துள்ளது. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர் ஒருவர் : ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டனை எப்படி இதுபோன்று பதவியில் இருந்து நீக்க முடியும்? ஒரு லெஜென்டரி ஐபிஎல் கேப்டன் எப்படி பாண்டியாவிற்கு கீழ் விளையாடுவது? இது ரோகித்திற்கு நீங்கள் இழைத்த பெரிய அவமானம் என்று தனது கருத்தினை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இப்படி ரசிகர்கள் ஒருபுறம் காட்டமான கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சக வீரர்களான சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, தவால் குல்கர்னி போன்ற வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மா நிச்சயம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பதை தெரிந்துகொண்ட ஒரு ஐ.பி.எல் அணி : மும்பை இந்தியன்ஸ் ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் செய்ய அணுகிய போதே ரோஹித் சர்மாவை மும்பை அணியில் இருந்து ட்ரேடிங் செய்ய முயன்றதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ரோஹித் சர்மாவை டிரேடிங் செய்ய நினைத்த அணி எது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி பாண்டியாவை குஜராத் அணியிடமிருந்து டிரேடிங் செய்ய முயன்று வருவதாக தெரிந்ததால் நிச்சயம் பாண்டியா புதிய கேப்டனாக மாற்றப்படுவார் என்பதை யூகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தான் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டிரேடிங் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : 20வது ஓவரில் ஓவரில் 4, 6, 6, 2, 6.. வாழ்வா – சாவா போட்டியில் வெ.இ அணியை வீழ்த்திய இங்கிலாந்து.. ஆஸியின் சாதனை சமன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் தனது அணி நிர்வாகத்துடன் இணைந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement