20வது ஓவரில் ஓவரில் 4, 6, 6, 2, 6.. வாழ்வா – சாவா போட்டியில் வெ.இ அணியை வீழ்த்திய இங்கிலாந்து.. ஆஸியின் சாதனை சமன்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்று அசத்தியது. அதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அதனால் 2022 டி20 உலகக் கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து இத்தொடரை வெல்ல டிசம்பர் 16ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு கிரெனடா நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 222/6 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

சாதனை வெற்றி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 6 பவுண்டரி 6 சிக்சருடன் 82 (45), ஷாய் ஹோப் 26 (19), ரோவ்மன் போவல் 39 (21) ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 2, சாம் கரண் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 223 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு இம்முறை ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை நேரடியாக எதிர்கொண்டு 12 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த கேப்டன் ஜோஸ் பட்லர் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 (34) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த வில் ஜேக்ஸ் 1 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார். அவருக்கு உறுதுணையாக அடுத்ததாக வந்த லியாம் லிவிங்ஸ்டன் தனது பங்கிற்கு 3 சிக்சரை பறக்க விட்டு 30 (18) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் சால்ட் சதமடித்து வெற்றிக்கு போராடியதால் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது ஆண்ட்ரே ரசல் வீசிய கடைசி ஓவரில் எதிர்புறம் புதிதாக களமிறங்கியிருந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் 4, 6, 6, 2, 6 என முதல் 5 பந்துகளிலேயே 24 ரன்கள் அடித்து ரன்கள் அடித்து மொத்தம் 31* (7) ரன்களுடன் இங்கிலாந்தை அதிரடியாக வெற்றி பெற வைத்தார். அதனால் 19.5 ஓவரில் 226/3 ரன்கள் எடுத்த இங்கிலாந்து இந்த வாழ்வா – சாவா போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: ரோஹித் – பாண்டியா கேப்டன்சி டிராமா மாற்றத்திற்கு மத்தியில் ட்ரெண்டாகும் சுரேஷ் ரெய்னாவின் பெயர் – கொண்டாடும் ரசிகர்கள்

அதிலும் கடைசி ஓவரில் 21 ரன்களை வெற்றிகரமாக எடுத்த இங்கிலாந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்கையில் 20வது ஓவரில் அதிக ரன்களை எடுத்து வென்ற அணி என்று ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை சமன் செய்தது. இதற்கு முன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக கௌதாத்தியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவும் கடைசி ஓவரில் 21 ரன்களை எடுத்து வென்றது சாதனையாக இருக்கிறது.

Advertisement