ரோஹித் – பாண்டியா கேப்டன்சி டிராமா மாற்றத்திற்கு மத்தியில் ட்ரெண்டாகும் சுரேஷ் ரெய்னாவின் பெயர் – கொண்டாடும் ரசிகர்கள்

Raina
- Advertisement -

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதில் இருந்து அவரது அணி மாற்றம் குறித்தே பலரது மத்தியிலும் அதிகளவில் பேச்சுக்கள் நீடித்து வந்தன. மேலும் ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்குள் வந்ததால் மும்பை அணியில் நிச்சயம் கேப்டன்சி மாற்றம் நிகழும் என்றும் பலரும் பேசி வந்தனர். அந்த வகையில் வெளிவந்த அனைத்து வதந்திகளையும் உறுதி செய்யும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய அறிவிப்பில் 2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக அணியில் தொடர்வார் என்று அவர்கள் அறிவித்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் அந்த அணியின் நிர்வாகத்தின் மீது மிகப்பெரிய அளவில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு 36 வயதாகும் ரோஹித் சர்மாவை இப்படி திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சாதாரண வீரராக விளையாட வைப்பது தவறு என்றும் தங்களது காட்டமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவானாக பார்க்கப்படும் ரோகித் சர்மா கடந்த 10 ஆண்டுகளாக அந்த அணியை வெற்றிகரமாக தலைமை தாங்கி ஐந்து முறை கோப்பையை வென்று பரிசளித்துள்ளார். ஆனால் அவர் இருக்கும் போதே ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக மாற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு வேறு அணிக்கு சென்ற ஒருவரை பணம் கொடுத்து வாங்கி இப்படி கேப்டனாக நியமித்துள்ளீர்களே? என்று ரசிகர்கள் மும்பை அணியின் நிர்வாகத்தை சாடி வருகின்றனர். இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது சுரேஷ் ரெய்னாவின் பெயர் அதிகளவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணியின் ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக அறிமுகமானதிலிருந்து அந்த அணிக்காக மட்டுமே உண்மையான விசுவாசத்துடன் விளையாடி வந்தார். அதோடு சீனியர் வீரராக இருந்தும் கேப்டன் தோனி மற்றும் நிர்வாகத்திற்கும் மிக உண்மையாக இருந்தார். சுரேஷ் ரெய்னா தனது கரியரில் பார்மின் உச்சத்தில் இருந்தபோது பல்வேறு அணிகள் அவரை கேப்டன் பதவி வழங்கி அணிமாற்றம் செய்ய கேட்டுக் கொண்டாலும் அதையெல்லாம் தவிர்த்த ரெய்னா எப்போதுமே சிஎஸ்கே அணியும், தோனியும் தான் முக்கியம் என்று ஒரு சலுகையையும் ஏற்காமல் இருந்தார்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.. எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி ஆர்சிபி வெளியிட்ட வீடியோ

இடையில் சிஎஸ்கே அணி ஐபிஎல்-லில் இருந்து 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டபோது குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்காக கேப்டன்சி செய்த அவருக்கு அதன்பிறகு கேப்டன்சி வாய்ப்புகள் பல்வேறு அணிகளில் இருந்து வந்தாலும் சிஎஸ்கே அணியை விட்டு விலகி செல்ல மனம் மனமில்லாமல் அந்த அணிக்காகவே விளையாடி இறுதியில் சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது ஓய்வை அறிவித்து விடை பெற்றார். இப்படி சென்னை அணிக்காக மட்டுமே இருந்த சுரேஷ் ரெய்னாவின் புகழை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement