மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.. எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி ஆர்சிபி வெளியிட்ட வீடியோ

RCB vs MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது அந்த அணி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் சச்சின் தலைமையில் 2012 வரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தடுமாறியாக மும்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோகித் சர்மா கோப்பையை வென்று கொடுத்தார்.

அதை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் மொத்தம் 5 கோப்பைகளை வென்ற அவர் ஒரு கட்டத்தில் தோனியையே மிஞ்சி குறுகிய காலத்தில் மும்பையை வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்தார். அந்த வகையில் அலமாரி முழுவதும் வெற்றிக் கோப்பைகளை அடுக்கிய ரோகித் சர்மா கடைசி வரை மும்பை அணியின் கேப்டனாக இருப்பார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

எண்ணையை ஊற்றிய ஆர்சிபி:
ஆனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை அறிவித்துள்ளது தான் ரசிகர்களை கோபமடைய வைக்கிறது. குறிப்பாக பாண்டியாவை வளர்த்த ரோகித் சர்மா இன்று அவருடைய தலைமையில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் கொதிக்கும் ரசிகர்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்வதை நிறுத்தி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 16 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லா விட்டாலும் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற வீரர்களை தாங்கள் தொடர்ந்து விஸ்வாசத்துடன் மதித்து வருவதாக பெங்களூரு அணி நிர்வாகம் “லாயல்டி இஸ் ராயல்டி” என்ற தலைப்புடன் புதிய வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளது. அதில் மற்ற அணிக்காக விளையாடுவதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்று விராட் கோலி பேசியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஏபி டீ வில்லியர்ஸ், கெயில் போன்ற நட்சத்திர வீரர்களும் விஸ்வாசத்திற்கு அடையாளமாக பெங்களூரு அணி இருக்கிறது என்று ஏற்கனவே பேசிய சில கருத்துக்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் எவ்வளவு கோப்பைகளை வென்றாலும் எளிதில் வெல்ல முடியாத விஸ்வாசத்தை தங்களுடைய அணி கொண்டிருப்பதாக பெங்களூரு நிர்வாகம் மறைமுகமாக கூறியுள்ளது.

இதையும் படிங்க: ரோஹித்தை வாழ்த்தி சிஎஸ்கே வெளியிட்ட பதிவுக்கு ரோஹித் மனைவி கொடுத்த பாசமான பதில் – அதிரும் மும்பை இந்தியன்ஸ்

அதை பார்க்கும் பெங்களூரு ரசிகர்கள் விஸ்வாசத்தை எங்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பணத்திற்காக குஜராத்தை விட்டு வந்த பாண்டியாவையும் நன்றி மறந்து ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பையை அணியையும் அறிவுறுத்தி வருகின்றனர். மொத்தத்தில் மும்பை ரசிகர்கள் எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் எண்ணெயை ஊற்றுவது போல் பெங்களூரு அணி வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement