மனிஷ் பாண்டேவுக்கு பிசிசிஐ தடை.. கடைசி நேரத்தில் தப்பிய சக்காரியா.. 6 பவுலர்கள் இடைநிறுத்தம்

Manish Pandey
- Advertisement -

ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டான கிரிக்கெட்டில் அனைத்து வீரர்களும் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது முக்கியமாகும். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பந்தை எறியாமல் சரியாக வீசுவதற்காக அடிப்படையாக சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அதைப் பின்பற்றாமல் பந்து வீசி வரலாற்றில் பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் தடை பெற்று தங்களது பிரச்சினைகளை சரி செய்து கொண்டு மீண்டும் விளையாடிய கதைகள் ஏராளமாக உள்ளது.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் விளையாடும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசாத பவுலர்களை பிசிசிஐ கண்டறிந்து அதிரடியான தடையை விதித்துள்ளது. அதில் முதலாவதாக கர்நாடக அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் மணிஷ் பாண்டே விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசாததால் இனிமேல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்து வீசுவதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.

- Advertisement -

தப்பிய சக்காரியா:
முழு நேர பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய அவர் அவ்வப்போது பகுதி நேர பவுலராக பந்து வீசுவது வழக்கமாகும். இருப்பினும் அவருடைய பவுலிங் விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. ஒருவேளை வருங்காலங்களில் முன்னேற்றங்களை கண்டு தம்முடைய ஆக்சனை சரி செய்து வந்தால் மீண்டும் அவர் பந்து வீசுவதற்கு அனுமதிக்கப்படுவார்.

அதே போல கர்நாடகவை சேர்ந்த மற்றொரு வீரர் கேஎல் ஸ்ரீஜித்துக்கும் பந்து வீச தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் மும்பையை சேர்ந்த டானுஷ் கோட்டியான், கேரளாவைச் சேர்ந்த ரோகன் குன்னும்மாள், சௌராஷ்டிராவை சேர்ந்த சேட்டன் சகாரியா மற்றும் சிராக் காந்தி, விதர்பாவை சேர்ந்த சௌரத் துபே, ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த அர்பித் குலேரியா ஆகிய 7 பவுலர்கள் விதிமுறைகளை மீறி பந்து வீசி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் அவர்கள் தற்காலிகமாக பந்து வீசுவதற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியாவுக்காக கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகி 1 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடிய சேட்டன் சகாரியா தற்சமயத்தில் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் எப்படி அவருடைய பெயர் இந்த பட்டியலில் வந்திருக்க முடியும் என்று சௌராஷ்டிரா வாரியம் கேள்வி எழுப்பியது.

அதன் பின்பே அவருடைய பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதை கண்டறிந்த பிசிசிஐ அதிகாரிகள் தற்போது சேட்டன் சக்காரியாவின் பெயரை நீக்கியுள்ளார்கள். அதனால் கடைசி நேரத்தில் தப்பிய சக்காரியா டிசம்பர் 19ஆம் நடைபெற உள்ள 2024 ஐபிஎல் ஏலத்தில் வழக்கம் போல பங்கேற்கலாம். ஆனால் எஞ்சிய 6 பவுலர்களில் ஐபிஎல் ஏலத்துக்காக தேர்வான வீரர்கள் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement