WTC Final : அந்த 2 இந்திய பவுலர்களை நெனச்சா தான் பக்குனு இருக்கு – டேவிட் வார்னர் வெளிப்படை

David-Warner
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்து சென்றடைந்து தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது.

IND vs AUS

- Advertisement -

இவ்வேளையில் இந்தத் தொடரில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் தற்போதே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? சிறப்பாக விளையாடும் வீரர்கள் யார்? என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் சில வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர அதிரடி துவக்க வீரரான டேவிட் வார்னர் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போகும் பந்துவீச்சாளர்கள் குறித்து கருத்துணை தெரிவித்துள்ளார்.

siraj

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த இறுதிப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. நான் தற்போது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி பயிற்சி எடுத்து வருகிறேன். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு தற்போது மிகச் சிறப்பாக உள்ளதால் அவர்களை கவனமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்தை நன்றாக ஸ்விங் செய்து அதே நேரத்தில் வேகத்துடனும் வீசுவார்கள் என்பதால் அவருக்கு எதிராக விளையாடுவதை நினைத்தால் தற்போது நிறைய யோசிக்க தோன்றுகிறது என்று டேவிட் வார்னர் வெளிப்படையாக கூறினார்.

இதையும் படிங்க : WTC Final : ஒருவேளை ஃபைனலில் மழை வந்தால் – ட்ராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? ஐசிசி கூறும் ரூல்ஸ் இதோ

அது மட்டுமின்றி இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு அடுத்தடுத்த தொடர்கள் இருப்பதினால் தற்போது இந்த ஒரு போட்டியில் மட்டுமே கவனத்தை செலுத்து விரும்புவதாக தெரிவித்து இருந்தார். அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறவுள்ள அவருக்கு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement