DC vs PBKS : நாங்க ஜெயிச்சாலும் இந்த ஒரு விஷயத்தை மோசமா பண்ணியிக்கோம். உண்மையை ஒப்புக்கொண்ட – டேவிட் வார்னர்

David-Warner
- Advertisement -

தர்மசாலா நகரில் நேற்று நடைபெற்ற 64-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று தர்மசாலா நகரில் உள்ள ஹிமாச்சலப் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

DC

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது துவக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக விளையாடிய நான்கு பேட்ஸ்மேன்களுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக இந்த இன்னிங்ஸில் அவர்கள் 20 பவுண்டரிகளையும், 11 சிக்ஸர்களையும் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது துவக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்ததால் அவர்களால் இறுதிவரை சேசிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை. இறுதியில் பஞ்சாப் அணி 198 ரன்களை மட்டுமே குவித்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.

Livingstone

பஞ்சாப் அணி சார்பாக லிவிங்ஸ்டன் மட்டும் இறுதி வரை போராடி 48 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 94 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேசுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி ஆனாலும் என்னை பொருத்தவரை இந்த போட்டியில் பீல்டிங்கில் நாங்கள் மிகவும் மோசமாக செயல்பட்டோம். அதனை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் பல கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டுள்ளோம். இருந்தாலும் இந்த வெற்றி எங்களுக்கு கடைசி நேரத்தில் கிடைத்துள்ளது. எங்களது சொந்த மைதானத்தில் நாங்கள் தடுமாற்றத்தை சந்தித்தாலும் வெளியில் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

இதையும் படிங்க : PBKS vs DC : அந்த 2 ஓவர்தான் எங்களோட தோல்விக்கு காரணம். தோல்விக்கு பிறகு – பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் வருத்தம்

இந்த போட்டியில் ப்ரதிவி ஷா மீண்டும் வந்து விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. ரைலி ரூஸோ சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்த தொடரானது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் இனிவரும் தொடர்களில் எங்களது சொந்த மைதானத்திலும் இனிமேல் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறோம். இந்த வெற்றி எங்களுடைய வருத்தத்தை சற்று குறைத்துள்ளது என டேவிட் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement