PBKS vs DC : அந்த 2 ஓவர்தான் எங்களோட தோல்விக்கு காரணம். தோல்விக்கு பிறகு – பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் வருத்தம்

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

DC vs PBKS

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக ரைலி ரூஸோ 82 ரன்களையும், துவக்க வீரர் ப்ரிதிவி ஷா 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே குவித்ததால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் :

Rossouw

இந்து தோல்வி உண்மையிலேயே எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த போட்டியின் முதல் ஆறு ஓவர்கள் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. துவக்கத்திலேயே பவர்பிளேவில் பந்து ஸ்விங் ஆனதால் விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் துவக்க ஓவர்களில் விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. எங்களது அணி சார்பாக லிவிங்ஸ்டன் மிகச் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

ஆனாலும் இறுதியில் எங்களால் சேசிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியவில்லை. நான் இந்த போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளரை கடைசி ஓவரினை வீச வைத்தது எங்களுக்கே பாதகமாக மாறிவிட்டது. வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவரில் அதிகமாக ரன்கள் கசிந்ததாலேயே சுழற்பந்து வீச்சாளரை கடைசி ஓவர் வீச வைத்தேன். ஆனால் இந்த இன்னிங்ஸின் கடைசி இரண்டு ஓவரில் அதிக ரன்கள் சென்றே நாங்கள் அடைந்த தோல்விக்கு காரணமாகவும் மாறியது.

இதையும் படிங்க : IPL 2023 : இவருக்கு இதே வேலையா போச்சி. மீண்டும் தோனியை வம்பிற்கு இழுத்த கம்பீர் – ரசிகர்கள் கண்டனம்

அதேபோன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போது பவர் பிளேவில் நாங்கள் அதிகளவு ரன்களை குவிக்கவில்லை. அதோடு விக்கெட்டையும் இழந்து விட்டோம் எனவே இந்த தோல்வி எங்களுக்கு கிடைத்தது என ஷிகர் தவான் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement