- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவால் அலைஞ்சது தெ.ஆ தோற்க ஒரு காரணம்.. என் சப்போர்ட் நியூஸிலாந்துக்கே.. மில்லர் சோகமான பேட்டி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்தது. அதனால் முதல் கிரிக்கெட் அணியாக இந்தியா ஃபைனலுக்கு தகுதிப் பெற்றது. அந்த நிலையில் மார்ச் 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாஹூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் தென்னாபிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்க தகுதி பெற்றுள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் 102, ரச்சின் ரவீந்தரா 108 ரன்கள் எடுத்த உதவியுடன் 363 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 57, வேன் டெர் டுஷன் 69 ரன்கள் எடுத்தனர். ஆனால் கிளாசின் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் கடைசியில் டேவிட் மில்லர் அதிரடியாக 100* (67) ரன்கள் எடுத்துப் போராடியும் தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்தியாவால் அலைச்சல்:

அதனால் ஐசிசி ஒருநாள் தொடர்களில் விளையாடிய 11 போட்டிகளில் 10வது முறையாக செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்து தென்னாப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறியது. முன்னதாக இத்தொடரில் பாதுகாப்பு பிரச்சினைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அந்த சூழ்நிலையில் குரூப் பி பிரிவில் தென்னாபிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 நாள் முன்பாகவே டாப் 2 இடங்களை உறுதியாகப் பிடித்து விட்டன.

மறுபுறம் குரூப் ஏ பிரிவின் டாப் 2 இடங்கள் மார்ச் 2ஆம் தேதி இந்தியா – நியூசிலாந்து மோதிய கடைசிப் போட்டி வரை தீர்மானிக்கப்படவில்லை. எனவே மார்ச் 4ஆம் தேதி நடைபெறவிருந்த முதல் செமி ஃபைனலுக்கு தயாராக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முன்னதாகவே துபாய்க்கு பயணித்தன. கடைசியில் மார்ச் 2ஆம் தேதி நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வென்றதால் ஆஸ்திரேலியா அங்கேயே இருந்தது.

- Advertisement -

மில்லர் ஏமாற்றம்:

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சென்றன. அப்படி செமி ஃபைனலுக்கு முழுமையாக தயாராகாமல் அலைந்தது தங்களது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாக டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விமானத்தில் பறக்க 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். ஆனால் நாங்கள் அதை செய்ய வேண்டும் என்பது சிறந்ததல்ல”

இதையும் படிங்க: ஒருநாள் கூட நாங்க துபாய் பிட்ச்ல இதை பண்ணல.. அப்புறம் எப்படி குற்றம் சொல்றீங்க – பொங்கி எழுந்த கம்பீர்

“ஏனெனில் அந்தப் போட்டி முடிந்ததும் காலையிலேயே நாங்கள் புறப்பட வேண்டியிருந்தது. முதல் நாள் மாலையில் 4 மணிக்கு துபாய்க்கு சென்ற நாங்கள் அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்பது நன்றாக இல்லை. அந்தப் பயணங்களால் எங்களுக்கு போதுமான நேரம் மற்றும் சூழ்நிலை அமையவில்லை. (ஃபைனல் பற்றி கேட்டதற்கு) உங்களிடம் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் நியூசிலாந்து அணிக்கு ஃபைனலில் ஆதரவு தருவேன்” என்று கூறினார்.

- Advertisement -