ஒருநாள் கூட நாங்க துபாய் பிட்ச்ல இதை பண்ணல.. அப்புறம் எப்படி குற்றம் சொல்றீங்க – பொங்கி எழுந்த கம்பீர்

Gambhir
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணியானது வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி மீது குற்றம் சொல்வது தவறு : கவுதம் கம்பீர்

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கும் நுழைந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் மட்டுமே நடைபெற்று வருவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருப்பதாக பல்வேறு குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் இந்திய அணியின் மீது இருக்கின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறுகையில் :

இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது சாதகம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் எங்களுக்கு மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் இது ஒரு பொதுவான மைதானம் தான். அதாவது இது எங்களுடைய உள்ளூர் மைதானம் கிடையாது. கடைசியாக நாங்கள் இங்கு எப்போது விளையாடினோம் என்பது கூட ஞாபகம் இல்லை.

- Advertisement -

இந்திய அணி துபாயில் மட்டுமல்ல எங்கு விளையாடினாலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் அளவிற்கு பலமாகத்தான் இருக்கிறது. துபாய் மைதானத்தில் எங்களுக்கு கூடுதல் அனுகூலம் என்று விவாதிக்கப்படுவது முற்றிலும் தவறான ஒன்று. ஏனெனில் ஒருநாள் கூட நாங்கள் போட்டி நடைபெறும் இந்த மைதானத்தில் பயிற்சி எடுத்தது கிடையாது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐசிசி அகாடமி மைதானத்தில் மட்டுமே பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இதையும் படிங்க : 19 வருஷமா நேசிச்ச இந்த விஷயத்தில் இருந்து வெளியேறுவது கஷ்டமா இருக்கு – ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம்

அதன் பின்னர் போட்டிகள் நடைபெறும் நாள் மட்டுமே துபாய் மைதானத்தில் விளையாடுகிறோம். இவ்விரு இடங்களுக்குமே இடையே உள்ள சீதோசன நிலை முற்றிலும் வித்தியாசமானது. எங்களுக்கும் துபாய் மைதானத்தில் விளையாடுவது சவாலாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதனை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறோம் கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement