
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப் பிரிக்க அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியானது 9-ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை குவித்தது.
பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியின் போது இரண்டாம் பாதியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியால் 50 ஓவர்களில் முடிவில் 312 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் அந்த அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிக்க அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் 67 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து சதம் அடித்திருந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கின் 23 ஆண்டுகால சாதனை ஒன்றினை அவர் முறியடித்துள்ளார்.
அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது அதிவேகமாக சதம் அடித்த சர்வதேச வீரர் என்ற சாதனையை சேவாக் தன்வசம் வைத்திருந்தார். கொழும்பு நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 77 பந்துகளில் சேவாக் சதம் அடித்திருந்தார்.
இதையும் படிங்க : நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம்.. இனி அதை செய்யக்கூடாது – தெம்பா பவுமா வருத்தம்
அதுவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிவேகமாக அதிகபட்ட சதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சாதனையை முறியடித்துள்ள டேவிட் வார்னர் 67 பந்துகளிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.