- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங்கால் அவரோட இடத்தை பூர்த்தி செய்ய முடியாது.. இந்திய அணி கஷடப்படும் – முன்னாள் இங்கி வீரர் கிண்டல்

எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் உறுதி செய்யப்பட்ட வேளையில் அந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட அவர் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசாமல் ஓய்வெடுத்தார்.

அர்ஷ்தீப் சிங் இந்த விடயத்தில் கஷ்டப்படுவார் :

அதன் பிறகு தாயகம் திரும்பிய அவர் தொடர்ந்து மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்த வேளையில் அவரது காயம் அதிகரித்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் இந்திய அணியில் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா ஹார்டிக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர்தான் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட உள்ளனர். இப்படி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே செல்லும் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் ஒருநாள் போட்டிகளில் 9 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார்.

டி20 போட்டிகளில் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் பெரிய அளவில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கிண்டல் செய்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான டேவிட் லாயிடு கூறுகையில் : இந்திய அணி பும்ரா இன்றி நிச்சயம் கஷ்டப்படும். உலகின் தலைசிறந்த பவுலரான பும்ரா இல்லை என்றால் அது இந்திய அணிக்கு பிரச்சனை தான்.

- Advertisement -

தற்போது அர்ஷ்தீப் சிங் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளை போன்று ஒருநாள் போட்டி கிடையாது. டி20 ஒரு சின்ன பார்ட்டி மாதிரி. ஆனால் ஒருநாள் போட்டி ஒரு பெரிய போட்டி. 10 ஓவர்களை வீசியே ஆக வேண்டும். அர்ஷ்தீப் சிங் அதனை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை என்று கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் எந்த அணியாலும் வாங்கப்படமால் போனதால் ஷர்துல் தாகூர் எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ

இதுவரை இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 5 ஓவர்கள் வீசி 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -