- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உண்மையா இந்தியாவை வெச்சு ஃபிக்சிங் பண்றது நீங்க தான்.. இதை நிறுத்துங்க.. ஐசிசி’யை விமர்சித்த டேவிட் லாய்ட்

ஐசிசி 2024 உலகக் கோப்பை ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. முன்னதாக அந்தத் தொடரில் செமி ஃபைனல் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக கயானா நகரில் நடத்தப்பட்டதாக மைக்கேல் வாகன், நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் ஃபிக்சிங் செய்வதற்கு எதிராக இருக்கும் ஐசிசி தான் உண்மையாகவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்படியாவது நடைபெற வேண்டும் என்று ஃபிக்ஸ் செய்வதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் விமர்சித்துள்ளார். குறிப்பாக உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை இயற்கையாக அமைக்காமல் ரசிகர்களை கவர்ந்து எப்படியாவது பணத்தை சம்பாதிப்பதற்காக இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்க வேண்டும் என்று ஐசிசி செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

ஐசிசி’க்கே விமர்சனம்:
இது பற்றி டால்க்ஸ்போர்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “போட்டிகளின் சுதந்திரத் தன்மையை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நீண்ட காலமாக நாம் கிரிக்கெட்டில் ஃபிக்சிங் பற்றி கடுமையாக பேசி வருகிறோம். ஆனால் இது ஒரு முக்கிய நிகழ்வுக்காக மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களை எதிர்நோக்குவதற்காக ஏதோ செய்கின்றனர். அப்படி நடந்தால் அது ஒரு நிகழ்வாகும்”

“விளையாட்டு ஒரு நிகழ்வு தான். உங்களால் அதை சரி செய்ய முடியாது. ஆனால் இந்த உலகக் கோப்பையை நீங்கள் உங்கள் வசதிக்கு தகுந்தார் போல் கையாள முயற்சிக்கிறீர்கள். அது தவறு. அப்படி செய்வது மற்ற அணிகளுக்கு நியாயமற்றது கிடையாது. இங்கே சிலருக்காக நீங்கள் மொத்த தொடரையும் கையாள்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் தொலைக்காட்சி ரசிகர்களை பாருங்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் அனைத்தையும் பார்க்கின்றனர்”

- Advertisement -

“அங்கே கிரிக்கெட் ஒரு மதம். அதனால் கிரிக்கெட்டை அனைவரும் அங்கே பார்ப்பார்கள். எனவே அங்கு அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது. அது தான் இந்த உலகக் கோப்பை தொடரையே மீறுகிறது. மேலும் ஐசிசி அதை திட்டமிடுகிறது என்று சொல்லாதீர்கள். இவற்றையெல்லாம் யார் செய்வது? யாராக இருந்தாலும் இப்படி செய்வது மற்ற அணிகளுக்கு அநியாயம் என்று அவர்களிடம் யாராவது சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: ஏன் எல்லாரும் என்னை வெறுக்கிறீங்க? நான் அதுக்கு தகுதியில்லாதவன்.. காலம் மாறிடுச்சு.. ரியான் பராக் பேட்டி

“உங்களால் முடிந்த சிறந்த உலகக் கோப்பையுடன் வாருங்கள். அனைவரையும் ஒன்றாக இணையுங்கள்” என்று கூறினார். அதாவது இந்தியாவுக்காக ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளாமல் அனைவருக்கும் நியாயமாக நடந்து கொள்ளுமாறு ஐசிசி’க்கு டேவிட் லாய்ட் அறிவுரை வழங்கியுள்ளார். மொத்தத்தில் இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக பலரும் விமர்சிப்பது வாடிக்கையாகி வருகிறது.

- Advertisement -