ஏன் எல்லாரும் என்னை வெறுக்கிறீங்க? நான் அதுக்கு தகுதியில்லாதவன்.. காலம் மாறிடுச்சு.. ரியான் பராக் பேட்டி

Riyan Parag
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதில் அனைத்து சீனியர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடுகிறது.

அந்த அணியில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்கள் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் இந்த வருடம் 531 ரன்கள் அடித்து அசத்திய ரியான் பராக் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியுள்ளார். 2019 – 2023 வரை 5 வருடங்கள் சுமாராக செயல்பட்ட அவர் அவ்வப்போது கொஞ்சம் திமிராக நடந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

- Advertisement -

வெறுப்பு ஏன்:
சொல்லப்போனால் 2024 டி20 உலகக் கோப்பையில் தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் அதை பார்க்கப் போவதில்லை என்று சொன்ன அவர் இந்தியா ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்றும் கூறியிருந்தார். அதனால் ரசிகர்கள் எப்போதும் அவரை ஒரு பக்கம் கிண்டலடித்து விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் தன் மீது ரசிகர்கள் இவ்வளவு வெறுப்பை வைத்திருப்பது ஏன்? என்று ரியான் பராக் கூறியுள்ளார்.

மேலும் இவ்வளவு வெறுப்புக்கு தாம் தகுதியானவன் அல்ல என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் எனக்கு நானே பேசிக் கொண்டேன். ஏனெனில் உண்மையில் தகுதியற்ற விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஒருவேளை நான் சில விஷயங்களில் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் எப்போதும் நான் எனது கால்களை முன்னோக்கி வைத்திருக்கிறேன்”

- Advertisement -

“அதனால் அனைத்து விதமான கிண்டல்களுக்கும் நான் தகுதியானவன் அல்ல என்று நினைத்தேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? ரசிகர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பேசுவார்கள். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவதற்கு தகுதியற்றவன் என்று அவர்கள் சொன்னார்கள். இப்போது என்னை இந்திய அணியில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் ஒரு ஸ்விட்ச் போல ரசிகர்கள் மாறுகிறார்கள்”

இதையும் படிங்க: 0 ரன்ஸ்.. ஆடவர், மகளிர் டி20 உ.கோ வரலாற்றில்.. யாருமே செய்யாத தனித்துவ சாதனை படைத்த பும்ரா

“வலிகளால் தான் முதிர்ச்சி வரும். மில்லியன் மக்கள் பார்க்கும் ஐபிஎல் தொடரில் நான் அசத்தாத போது மோசமாக உணர்ந்தேன். அப்போதெல்லாம் ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் நான் ஏன் அவ்வளவு வெறுப்புகளைப் பெற்றேன்? ராஜஸ்தான் அணியைத் தவிர்த்து எனக்கு அனைவரிடமும் எதிர்மறையான எனர்ஜி கிடைத்தது. இருப்பினும் விளையாட்டை புரிந்து கொள்ள முயற்சித்த பின் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறேன்” என்று கூறினார்.

Advertisement