0 ரன்ஸ்.. ஆடவர், மகளிர் டி20 உ.கோ வரலாற்றில்.. யாருமே செய்யாத தனித்துவ சாதனை படைத்த பும்ரா

Jasprit Bumrah 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற்று முடிந்தது. வரலாற்றிலேயே முதல் முறையாக அந்தத் தொடரில் உலகின் டாப் 20 அணிகள் விளையாடின. அந்த அணிகளை விட சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது. இந்த சரித்திர வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றினார் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் அயர்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தனித்துவமான பும்ரா:
குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியாவுக்கு 6 ரன்கள் வித்தியாசத்தில் பும்ரா மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதே போல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது 16, 18வது ஓவரை வீசிய அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்வதற்கு பும்ரா முக்கிய பங்காற்றினார்.

அந்த வகையில் மொத்தமாக 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 4.17 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்த பும்ரா தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய பும்ரா பேட்டிங்கில் 1 ரன்கள் கூட எடுக்கவில்லை. பெரும்பாலும் அவரைப் போன்ற டெயில் எண்டர்கள் ஏதோ ஒரு போட்டியில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்து ஓரிரு ரன்களை எடுப்பார்கள்.

- Advertisement -

ஆனால் இந்தத் தொடரின் 8 போட்டிகளிலும் பேட்டிங் செய்யாத பும்ரா 1 ரன் கூட எடுக்காமலேயே தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய அனைத்து வகையான டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1 ரன் கூட எடுக்காமல் தொடர்நாயகன் விருதை வென்ற முதல் கிரிக்கெட்டர் என்ற தனித்துவமான சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: டி20 உ.கோ வென்றது இல்லாமல்.. ஐசிசி தரவரிசையில் வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாறு படைத்த பாண்டியா

அந்த வகையில் தன்னுடைய பவுலிங் திறமையை மட்டுமே வைத்து ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவுக்காக சாதித்து காட்டியுள்ளார். இது போக ஆடவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்நாயகன் விருதை என்ற முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Advertisement