
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடி வருகிறார். குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ச்சியாக அவர் தம்முடைய விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அசத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் விராட் கோலியால் இங்கிலாந்து தொடரில் அசத்த முடியாது என்று முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார். எனவே கௌதம் கம்பீர் புதிய சச்சின் டெண்டுல்கரை கண்டறிய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கான 2 காரணங்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாம் நம்முடைய சிறந்த காலத்தை கடந்து விட்டோம் என்பதை விராட் கோலிக்கு தெரியும். அது வலியை கொடுக்கும். இங்கிலாந்துக்கு வரும் போது அவர் எங்கே செல்வார். அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தடுமாறி ஸ்லிப் பகுதியில் விழுவார். அவர் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக தடுமாறுகிறார் என்று ரிக்கி பாண்டிங் சொன்னார்”
“அது தேர்வாளர்களுக்கும் தெரியும். விராட் கோலி மகத்தான வீரர்களில் ஒருவர் ஆனால் அவர் தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து விட்டார். அவர் தன்னுடைய காலத்தை இழந்து விட்டார். அவருடைய நேரம் முடிந்து விட்டது. வயதால் இது வருகிறது. அனைவரும் அவுட் சைடு பந்துகளை அடிக்காமல் விடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அதைக்கூட செய்ய முடியாத அவர் முடிந்து விட்டார்”
“அவர்கள் சிறந்த சர்வதேச வீரர்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டானால் உங்களுடைய ரியாக்சன் நேரம் முடிந்து விட்டது என்று அர்த்தம். பொதுவாக அணியில் மாற்றங்கள் நிகழும் போது நீங்கள் புதிய வீரர்களை கண்டறிய வேண்டும்”
இதையும் படிங்க: இன்னைக்கும் அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடியும்.. அவரை டி20 அணிக்கு கொண்டு வாங்க – சீக்கா ஆதரவு
“அதைத்தான் கேப்டன், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் செய்ய வேண்டும். இந்தியாவில் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள். எனவே இது இளம் வீரர்கள் அசத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வழியாகும். ஒருவேளை நான் அங்கே இருந்தால் இதைத்தான் செய்வேன். நான் புதிய ராகுல் டிராவிட் புதிய டெண்டுல்கர் அல்லது புதிய கங்குலியை கண்டறிவேன். ஏனெனில் அப்படித்தான் அவர்களும் அணிக்குள் வருவார்கள்” என்று கூறினார்.