கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.சி.சி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு கேப்டன் ரோஹித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வினை அறிவித்தனர்.
அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வாங்க :
அதன் காரணமாக தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட புதிய அணியானது டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அனுபவ வீரர்கள் பலரும் ஓய்வினை அறிவித்து விட்டதால் தற்போது இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது. ஆனாலும் டி20 அணியை பொறுத்தவரை பந்துவீச்சு யூனிட்டில் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யாஷ் தயாள், முகேஷ் குமார் போன்ற அனுபவமற்ற வீரர்களே இடம்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் டி20 இந்திய அணிக்கு அனுபவ வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாரை கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இன்றளவும் புவனேஸ்வர் குமாரால் இரண்டு புறமும் பந்தினை ஸ்விங் செய்து வீச முடியும். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரை இந்திய அணி தற்போது மறந்தே விட்டது.
இதையும் படிங்க : சதமடித்தும் சாம்பியன்ஸ் ட்ராபியில் கழற்றி விடப்படும் சஞ்சு சாம்சன்.. 3 கீப்பர்கள் பற்றி வெளியான தகவல்
என்னை பொருத்தவரை முகமது சிராஜுக்கு பதிலாக புவனேஸ்வர் குமாரை கொண்டு வந்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான புவனேஷ் குமார் இதுவரை 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



