- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பழைசை மறந்து 6 வருஷமாச்சு.. ஹர்டிக் பாண்டியாவை கழற்றி விட்டது சரி தான்.. தேவ் வாட்மோர் அதிருப்தி

நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து இந்திய அணியின் டி20 துணை கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016இல் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான பாண்டியா 2018க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஆல் ரவுண்டராக முன்னேறி வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் கபில் தேவுக்கு பின் தரமான ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை மொத்தமாக புறக்கணித்த அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவதில்லை. இருப்பினும் 2022 ஐபிஎல் கோப்பையை முதல் வருடத்திலேயே அவர் கேப்டனாக குஜராத் அணிக்கு வென்று கொடுத்தார். அதனால் 2022க்குப்பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

மாநில அணியை மறந்த பாண்டியா:
அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையிலும் துணை கேப்டனாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். அதனால் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக அனைத்து தொடர்களிலும் பாண்டியா விளையாடுவதில்லை என்று கருதிய புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரை மொத்தமாக கழற்றி விட்டு சூரியகுமாரை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

அத்துடன் ஒருநாள் அணியிலும் ஹர்திக் பாண்டியா கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் 2024 விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி ஃபிட்னஸை நிரூபித்தால் மட்டுமே பாண்டியாவுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை இந்திய ஒருநாள் அணியில் கழற்றி விடப்பட்டது சரி தான் என தேவ் வாட்மோர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் 2018க்குப்பின் கடந்த 6 வருடங்களாக தம்மை வளர்த்த பரோடா மாநில அணிக்காக பாண்டியா ஒரு முறை கூட விளையாடவில்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பரோடா அணியின் முன்னாள் பயிற்சியாளரான வாட்மோர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இப்போதும் சில வீரர்கள் உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதில்லை”

இதையும் படிங்க: அந்த சம்பவத்தால் மனமுடைந்த முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றார்.. அவரது நண்பர் வெளியிட்ட தகவல் – விவரம் இதோ

“எடுத்துக்காட்டாக பரோடா அணியில் என்னுடைய கடைசி சில வருடங்களில் ஹர்திக் பாண்டியா விளையாட வந்ததே கிடையாது. பரோடாவின் சிறந்த ஆல் ரவுண்டர் என்று அவரை பலரும் அழைத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் பரோடா அணிக்காக அவர் பல வருடங்கள் விளையாடவில்லை. சமீபத்தில் தங்களுடைய வீரர்கள் அனைவரையும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வைக்க பிசிசிஐ விரும்புவதை நான் பார்த்தேன். அது உள்ளூர் கிரிக்கெட் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கான முயற்சியாகும்” என்று கூறினார்.

- Advertisement -