அந்த சம்பவத்தால் மனமுடைந்த முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றார்.. அவரது நண்பர் வெளியிட்ட தகவல் – விவரம் இதோ

MohammedShami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள் 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 110 போட்டியில் விளையாடியுள்ள அனுபவம் உடையவர். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் முகமது ஷமி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை 18 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள முகமது ஷமி 55 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை முகமது ஷமிக்கு மிகவும் கடினமாகவே இருந்து வருகிறது. ஏனெனில் தனது மனைவியே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கூறி அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். மேலும் பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கி சூதாட்டத்திலும் ஈடுபட்டதாக அவர் மீது அவர் மனைவி குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

ஆனால் போலீசாரின் விசாரணையில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் நிரூபனமானது. இந்நிலையில் முகமது ஷமியின் நண்பர் உமேஷ் குமார் என்பவர் தற்போது பகிர்ந்துள்ள ஒரு கருத்தில் கூறியதாவது : முகமது ஷமி அவர் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது என் வீட்டில் தான் வசித்து வந்தார்.

- Advertisement -

அவரது மனைவி அவர் மீது மேட்ச் பிக்ஸிங் புகாரை அளித்ததும் முகமது ஷமி மனமுடைந்து போய்விட்டார். என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் என் நாட்டிற்கு நான் துரோகம் செய்கிறேன் என்ற குற்றச்சாட்டை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறினார்.

இதையும் படிங்க : கம்பீர் குறுக்கு வழியில் வந்துட்டாரு.. நியாயமா அவர் தான் பயிற்சியாளரா வந்துருக்கனும் .. தன்வீர் அஹ்மத் விமர்சனம்

அதோடு நான் வசித்த 19-வது மாடியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு முகமது ஷமி பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தார். நல்ல வேலை அவர் அந்த முடிவை எடுக்கவில்லை. போலீசார் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறிய பின்னர் தான் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார் என அவரது நண்பர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement