இந்திய அணிக்கெதிராக நாங்கள் இப்படி மோசமான தோக்க இதுவே காரணம் – இலங்கை கேப்டன் புலம்பல்

Shanaka
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி இங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் தற்போது முதலாவதாக நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியிடம் இலங்கை அணி இழந்துள்ளது. ஏற்கனவே இந்திய சுற்றுப் பயணத்திற்கு முன்னாள் ஆஸ்திரேலிய சென்றிருந்த இலங்கை அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 க்கு 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து இருந்தது.

INDvsSL

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்தியா வந்துள்ள இலங்கை அணியினர் தற்போது இங்கும் அவர்கள் 3-0 என்ற நிலையில் தோல்வியை சந்தித்துள்ளது சற்று வருத்தத்திற்குரிய விடயம் தான். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அந்த அணியில் டீசண்டான ரன் குவிப்பிற்கு காரணமாக அமைந்தார். பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 148 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

Shreyas

அதனை தொடர்ந்து தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா கூறுகையில் : இந்திய அணியை முதலில் வாழ்த்த விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்திய அணி வீரர்கள் மூன்றுவிதமான துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் எங்களை இந்த தொடரில் எளிதில் வீழ்த்தி விட்டனர்.

- Advertisement -

இந்த போட்டியில் அடைந்த காயம் காரணமாக என் கையில் சில தையல்களை போட வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன். சீனியர் பவுலர்கள் அணியில் இல்லாததே தோல்விக்கு காரணமாக கருதுகிறேன். ஏனெனில் இந்தியா போன்ற வலுவான அணிக்கெதிராக நல்ல பவுலிங் யூனிட் தேவை. அந்த வகையில் நாங்கள் ஒருசில பந்துவீச்சாளர்களை தவறவிட்டுள்ளது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிங்க : யாரை டீம்ல எடுக்குறதுனு ரொம்ப குழப்பமா இருக்கு – இலங்கை தொடரின் வெற்றிக்கு பிறகு ரோஹித் பேசியது என்ன?

இந்த போட்டியில் முதல் 6 ஓவர்களில் நாங்கள் அதிரடியாக பேட்டிங் செய்து இருந்தால் கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அதனை தவறவிட்டு விட்டோம். மற்றபடி எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். அவர் கூறியது போலவே இலங்கை அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களான ஹஸரங்கா மற்றும் தீக்ஷ்னா ஆகியோர் இடம் பெறாதது இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவு என்றே கூறலாம்.

Advertisement