IND vs SL : டி20 ல மிஸ் ஆயிடுச்சி, ஆனா ஒன்டே மேட்ச்ல கண்டிப்பா நான் அதை செய்வேன் – தசுன் ஷனகா பேட்டி

Shanaka
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாட இருக்கிறது.

IND vs SL

- Advertisement -

இந்நிலையில் நேற்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவு 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது.

பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 137 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த டி20 தொடரையும் கைப்பற்றியது.

Shivam Mavi

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த டி20 தொடரில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் : நான் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக சிறப்பான ஃபார்மில் இல்லை. ஆனால் இந்த தொடர் துவங்கியதுமே நான் நல்ல பாம்பிற்கு திரும்பியதாக நினைக்கிறேன்.

- Advertisement -

என்னுடைய தனிப்பட்ட ஆட்டம் இந்த தொடரில் மிகச் சிறப்பாக இருந்தது. எங்களது அணி வீரர்களும் இந்த தொடரில் மிக சிறப்பான முறையில் போராடியுள்ளனர். அது எங்களுக்கு நன்மையான ஒன்றுதான். இந்த டி20 தொடரில் நான் பந்துவீசாததற்கு காரணம் விரலில் ஏற்பட்ட காயம் தான்.

இதையும் படிங்க : டிராவிட் எப்போவுமே என்கிட்ட இதைத்தான் சொல்வாரு. அதுவே என் அதிரடிக்கு காரணம் – சூரியகுமார் பேட்டி

இந்த டி20 தொடரில் பந்துவீசாத நான் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பந்து வீசுவேன். இந்த மூன்றாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் விளையாடிய விதம் மிக அருமையாக இருந்தது என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement