- Advertisement -
ஐ.பி.எல்

பகல்நேர போட்டியில் அதை கண்டுபிடிக்கவே முடியல.. அந்த சத்ததுக்கு நாங்க அதிர்ஷ்டம் பண்ணிருக்கனும்.. மிட்சேல் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களுடைய 7வது வெற்றியை பதிவு செய்தது. மே 12ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் தடுமாற்றமாக விளையாடி 141/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47*, துருவ் ஜுரேல் 28 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக சிமர்ஜித் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 142 ரன்களை சேசிங் செய்த சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா 27 (18), டேரில் மிட்சேல் 22 (13), சிவம் துபே 18 (11), சமீர் ரிஸ்வி 15* (8) ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதை வீணடிக்காமல் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42* (41) ரன்கள் அடித்து 18.2 ஓவரில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அதிர்ஷ்டமான ரசிகர்கள்:
அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு சென்னை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததாக சென்னை வீரர் டேரில் மிட்சேல் கூறியுள்ளார்.

மேலும் பகல் நேரத்தில் எது சராசரி ஸ்கோர் என்பதை கணக்கிடுவது கடினமாக இருப்பதாக கூறும் அவர் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் ஆரவார சத்தத்திற்கு மத்தியில் விளையாடுவது தங்களுடைய அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஸ்லோவான பிட்ச்சில் வெற்றியின் எல்லை கடந்தது நன்றாக இருக்கிறது. மீண்டும் நாங்கள் வெற்றிப் பாதையில் பயணிப்பது நல்லது”

- Advertisement -

“எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தான் மீது அழுத்தத்தை போட்டு அவர்களை கட்டுப்படுத்தினர். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் சிறப்பான வேலையை செய்தனர். பகல் நேரத்தில் நடைபெறும் போட்டிகளில் எது சராசரியான ஸ்கோர் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் சிறிய பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் செலுத்துகிறேன். என்னைப் பொறுத்த வரை புதிய பந்தில் பேட்டிங் செய்வது சிறந்த நேரம்”

இதையும் படிங்க: நான் தான் சிஎஸ்கே அணிக்கு நன்றி சொல்லனும்.. அவரோட சேர்ந்து பிளான் பண்ணேன்.. ஆட்டநாயகன் சிமர்ஜித் பேட்டி

“ருதுராஜ் கடைசி வரை நின்று சிறப்பான வேலையை செய்தார். இவை அனைத்தும் எங்களுக்குள் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு யாரை அடிக்கலாம் என்பது பற்றியதாகும். இது போன்ற ரசிகர்கள் கூட்டத்திற்கு முன்னே விளையாடுவது எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். இது போன்ற சத்தம் எங்களை அதிர்ஷ்டமிக்கவர்களாக உணர வைக்கிறது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -