விராட் கோலிக்கு எதிராக பி.சி.சி.ஐ இப்படி நடந்துகொண்டது தவறு – டேனிஷ் கனேரியா கோபம்

Kaneria
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதோடு முன்பை போல் ரன் குவிக்க முடியாமல் சிரமப்படும் விராட் கோலி பணிச்சுமை காரணமாக டி20 உலக கோப்பை தொடருடன் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக இருக்கவும் விருப்பப்பட்டார்.

Kohli

- Advertisement -

குறிப்பாக 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை தொடர் வரை தான் ஒருநாள் போட்டியில் கேப்டன் பதவியில் இருக்க விரும்பினார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தென்ஆப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியில் விராட் கோலியின் கேப்டன் பதவியை பறித்து ரோஹித் சர்மாவிடம் வழங்கியுள்ளது.

மேலும் இனி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்க்கு ரோகித் தான் கேப்டனாக செயல்படுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் விராத் கோலியின் இந்த பதவி நீக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா பிசிசிஐ-யை தாக்கிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

kohli

விராட் கோலிக்கு எதிராக பிசிசிஐ எடுத்த நடவடிக்கை சரியானதா ? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் விராத் கோலி போன்ற பெரிய வீரருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் 95 போட்டிகளில் 65 வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனுக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை மிகவும் மோசமானது. அவரால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்றாலும் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட முக்கிய காரணம் இதுதானாம் – விவரம் இதோ

கோலி போன்ற சூப்பர் ஸ்டாரை இப்படி அவமதிப்பது தவறான விடயம். விராத் கோலியின் பதவி நீக்கத்திற்கு முன்பே அவரிடம் சரியான முறையில் கலந்து ஆலோசித்து நிலைமையை எடுத்துக்கூறி புரிய வைத்து இருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு அதிரடியாக பதவியில் இருந்து நீக்குவது சரியல்ல என்று டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement