விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட முக்கிய காரணம் இதுதானாம் – விவரம் இதோ

Rohith-1
Advertisement

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது கேப்டன் பதவியை துறந்தார். அதன்பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் எதிர்வரும் தென் ஆப்பிரிக்க தொடருக்காக இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டபோது ஒருநாள் அணிக்கும் ரோகித் கேப்டனாக நியமிக்கப்படுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டு அதிரடி காண்பித்தது.

rohith

மேலும் கேப்டன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இனி கேப்டனாக செயல்படுவார் என்றும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்க்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமாக டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு வடிவத்திற்கும் ஒரே ஒரு வீரர் தான் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என்பதனால் ரோகித் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு பின்னால் ஒரு முக்கியமான விடயம் ஒன்றினை பிசிசிஐ யோசித்து தான் இந்த முடிவினை எடுத்துள்ளது.

rohith

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டாலும் ஐசிசி தொடர்களின் முக்கிய போட்டிகளில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை இந்த இரண்டையும் கைப்பற்றும் நோக்கிலேயே தற்போது ரோகித் சர்மாவிற்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியின் கேப்டனாக எனது முதல் வேலை இதுதான் – சபதம் பூண்ட ரோஹித் சர்மா

ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ள ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டிலும் கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்றும் ரோகித் சர்மாவின் தலைமையில் அணியை பலமாக கட்டமைக்க பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement