இதுதான் அவருக்கு கடைசி சேன்ஸ். இதுல அவர் நிரூபிச்சே ஆகனும் – இந்திய வீரரை எச்சரித்த டேனிஷ் கனேரியா

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது விரைவில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் முன்னர் இருந்தே இந்த தொடரில் விளையாடும் சில வீரர்களுக்கு வீரர்கள் குறித்து நிறைய விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த தொடரில் கேப்டனாக செயல்படும் விராட் கோலியும் தற்போது அழுத்தத்தில் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் விளையாடி வரும் விராட் கோலி தற்போது டீ20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளார்.

kohli 4

- Advertisement -

விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கடந்த பல தொடர்களாகவே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி அடைந்து வந்தாலும் தனிப்பட்ட முறையில் விராத் கோலியின் பேட்டிங் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. மேலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு மட்டுமே அனைவரிடமும் மிஞ்சியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலிக்கு இந்த தென்னாபிரிக்கா தொடரானது ஒரு பெரிய சோதனையாக அமைய உள்ளது. ஏனெனில் இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தென்ஆப்பிரிக்க அணியில் மண்ணில் கோப்பையை கைப்பற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

kohli 1

இதுதான் கேப்டனாக கோலிக்கு கடைசி வாய்ப்பு. இந்த தொடரில் அவரது சிறப்பான பேட்டிங் வெளிப்பட்டால் மட்டுமே இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். அதனால் இதுவே கடைசி வாய்ப்பாக அமையும் என்று கனேரியா கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி உலக கோப்பை தொடரிலும் சற்று சுமாரான பேட்டிங்கை தான் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மா தவறவிட்டாலும் இவரு பாத்துப்பாரு. கவலைப்பட வேணாம் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் நம்பிக்கை

மேலும் டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வரும் கோலி நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement