டி20 உலகக்கோப்பை : புவனேஷ்வர் குமார் வேணாம். அவரை கூட்டிட்டு போங்க – டேனிஷ் கனேரியா அறிவுரை

Danish-Kaneria
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக தற்போது பார்க்கப்படும் விடயம் யாதெனில் பந்து வீச்சு மட்டும்தான். ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இல்லாமல் சமீபத்திய தொடர்களில் இந்திய அணி கடைசி கட்ட ஓவர்களில் ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கி வருகிறது. இப்படி இறுதி கட்டத்தில் இந்திய அணி ரன்களை வழங்குவதால் வெற்றி பெற வேண்டிய எளிதான போட்டிகளில் கூட தோல்வியை சந்தித்தது.

Bhuvi

- Advertisement -

அதன் காரணமாக இந்திய அணியின் பந்துவீச்சு மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. எது எப்படி இருப்பினும் பிசிசிஐ இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை உறுதி செய்து அறிவித்துவிட்டது. அதில் புவனேஸ்வர் குமார் அணியில் இடம் பெற்றுள்ளது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஏனெனில் சமீப காலமாகவே தனது பார்மை இழந்து தடுமாறி வரும் புவனேஸ்வர் குமார் இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தாமல் வாரி வழங்கி வருகிறார். அதோடு முன்பை போல் அவரால் பந்தை ஸ்விங் செய்யவும் முடியவில்லை. இப்படி ஃபார்ம் இழந்து இருக்கும் அவர் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைவார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Deepak-Chahar

அந்த வகையில் பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா புவனேஸ்வர் குமார் குறித்து கூறியதாவது : ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் புவனேஸ்வர் குமாரை எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்குவார்கள். எனவே ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் நிச்சயம் அவருடைய ஓவரை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்குவார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பந்து நன்றாக பேட்டுக்கு வரும் என்பதனால் குறைந்த வேகம் உடைய இவர் நிறைய அடி வாங்க வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை புவனேஸ்வர் குமாரை காட்டிலும் தீபக் சாகரை அணியில் சேர்க்கலாம். ஏனெனில் தற்போதைய பார்மின் படி தீபக் சாகரின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க : மொத்தமாக நிறுத்தப்பட்ட மோக்கா விளம்பரம், இந்தியா – பாக் போட்டிக்கான புதிய விளம்பரத்துக்கு வரவேற்பு

அவரால் பந்தை ஸ்விங் செய்ய முடிவதோடு சேர்த்து வெவ்வேறு வேரியேஷன்களிலும் வீச முடிகிறது. கூடுதலாக அவர் பேட்டிங் செய்யும் வீரர் என்பதனால் அது அணிக்கு சாதகமாகவும் அமையும். எனவே புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சாகரை அணியில் சேர்க்க வேண்டும் என டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Advertisement