இந்திய வீரரான அவரு ஓவர் வெயிட்டா இருக்காரு. அதான் அவரோட பிரச்சனை – டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு

Kaneria
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 2 க்கு 2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இந்த தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இளம் வீரரான ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களம் இறங்கி விளையாடியது.

- Advertisement -

இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக ஓரளவு சிறப்பான ஆட்டத்தையே இந்திய அணி வழங்கியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது அடுத்த 2 போட்டிகளிலும் சிறப்பான கொடுத்து வெற்றியை பெற்றது. இந்த தொடரில் இடம் பெற்றிருந்த பல்வேறு வீரர்களும் சிறப்பாக செயல்பட்ட வேளையில் கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அவரது இந்த மோசமான செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் நான்கு போட்டிகளில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் வெறும் 58 ரன்களை மட்டுமே அடித்தது அவரது மோசமான பேட்டிங் பார்மை வெளிக்காட்டியது. இந்நிலையில் இப்படிப்பட்ட பேட்டிங் பார்மை வைத்து அவரை உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யக்கூடாது என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.

Pant-1

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஸ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து பேசுகையில் கூறியதாவது : ரிஷப் பண்ட் தற்போது மோசமான பார்மில் உள்ளார். அதோடு வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது அவர் குனியாமல் நின்றுகொண்டே கீப்பிங் செய்கிறார். அவர் அதிக எடையுடன் இருப்பதால் தான் விரைவாக செயல்பட முடியவில்லை.

- Advertisement -

அவரது உடல் நலத்தில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும். அவர் பிட்னஸில் கவனம் செலுத்தினால் மட்டுமே அவரால் விரைவாக செயல்பட முடியும். மேலும் தனது பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அல்லது சஹா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து பண்டிற்கு தற்காலிக ஓய்வு கொடுக்கலாம் என்று கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ட்விட்டரில் இருப்பதை விட்டுவிட்டு ஆட்டத்தில் கவனத்தை செலுத்துங்கள் – இந்திய வீரருக்கு கிரேம் ஸ்மித் அட்வைஸ்

ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அவர்மீது அபரிவிதமான நம்பிக்கை அனைவரது மத்தியில் வளர்ந்த வேளையில் மீண்டும் அவர் தனது பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement