இந்தியாவுக்கு நீங்க வரலைனா யாருமே அங்க வரமாட்டாங்க – ரமீஸ் ராஜாவுக்கு டேனிஷ் கனேரியா கொடுத்த பதிலடி

Danish Kaneria Ramiz Raja
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் 3 போட்டிகளில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்ததாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் மோதுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது சாத்தியமாகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனெனில் வரலாற்றின் 16வது ஆசியக் கோப்பை அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் எல்லை பிரச்சனை காரணமாக அதில் பங்கேற்காது இந்தியா பயணிக்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த மாதம் அறிவித்தார்.

Ramiz Raja IND vs Pak

- Advertisement -

ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி பேசியது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு நீங்கள் வரவில்லை என்றால் அதே 2023இல் உங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் வரமாட்டோம் என்று அறிவித்தது. அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தங்களது நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அதன் தலைவர் ரமீஷ் ராஜா நேற்று முன்தினம் அறிவித்தார்.

பேசாம வேலையை பாருங்க:

அதை விட 2021 டி20 உலக கோப்பையிலும் இந்த வருடம் ஆசிய கோப்பையிலும் 3 முறை மில்லியன் டாலர் இந்திய அணியை தோற்கடித்து 2022 டி20 உலக கோப்பை ஃபைனல் வரை சென்று அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்? என்றும் அவர் கூறினார். இருப்பினும் சமீபத்திய டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதிய ஃபைனலுக்கு வந்த ரசிகர்களை விட இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதிய லீக் போட்டிக்கு அதிக ரசிகர்கள் வந்ததாக ஆதாரத்துடன் அவருக்கு பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள் நீங்கள் வரவே வேண்டாம் இதர நாடுகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்று தெரிவித்தார்கள்.

IND vs PAK Babar Azam Rohit Sharma

அது போக ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பாகிஸ்தான் பங்கு போடும் நிலையில் இந்தியா அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடாக இருப்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்த வல்லுனர்கள் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் பங்கு பணமும் கிடைக்காமல் போய்விடும் என்று எச்சரித்தார்கள். இந்நிலையில் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா வராமல் போனால் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற இந்தியாவின் நட்பு நாடுகளும் வராது என்று முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் இந்த விஷயத்தில் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்ற வகையில் தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐசிசி தொடரை புறக்கணிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் வாரியத்திடம் தைரியம் கிடையாது. மறுபுறம் பாகிஸ்தான் தங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் இந்தியா கவலைப்படாது. ஏனெனில் அவர்களிடம் அதிக வருமானத்தை ஈட்டும் மார்க்கெட் உள்ளது. எனவே இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்காமல் போனால் அதிக இழப்பு பாகிஸ்தானுக்கே ஏற்படும். அதனால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்க நிச்சயம் பயணிக்கும். ஏனெனில் நாளடைவில் ஐசிசியிடம் இருந்தே அதற்கான அழுத்தம் வரும்”

Kaneria

“மேலும் ஐசிசி தொடரை புறக்கணித்தால் அது பாகிஸ்தானுக்கு தான் மீண்டும் மீண்டும் இழப்பை ஏற்படுத்தும். ஆசிய கோப்பைக்கு இன்னும் நிறைய நேரங்கள் உள்ளது. அதனால் அது பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது பொதுவான இடத்தில் நடைபெறுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது.

இதையும் படிங்க : வீடியோ : கனவு நிஜமானதை கொண்டாடிய உம்ரான் மாலிக் குடும்பம் – வெறித்தனம் காட்டிய அவரது தம்பி

அதே சமயம் இந்தியா வராமல் போகும் பட்சத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற இதர அணிகளும் பாகிஸ்தான் வருவதற்கு மறுப்பு தெரிவிக்கலாம். பாகிஸ்தான் மக்கள் ஆசிய கோப்பையை தங்கள் நாட்டில் நடத்த விரும்பலாம். ஆனால் நமது நாட்டில் நிலவும் சூழ்நிலையால் நாம் ஒரு அடி பின் எடுத்து வைக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement