IND vs ZIM : இதே பாகிஸ்தானாக இருந்தா திணறி இருப்பாங்க – இந்தியாவை பாராட்டும் முன்னாள் பாக் வீரர்

Siraj
- Advertisement -

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2வது போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே தரமான இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியன் புர்ள் 39* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

IND vs ZIM Shikhar Dhawan

- Advertisement -

அதை தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 1, இஷான் கிசான் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் தலா 33 ரன்களும் தீபக் ஹூடா முக்கியமான 25 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்கள். இறுதியில் 3 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்ட சஞ்சு சாம்சன் 43* (39) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 25.4 ஓவரிலேயே 167/5 ரன்களை எடுத்து எளிதாக வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இந்த தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

கலாய்க்கும் ரசிகர்கள்:
முன்னதாக ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத இந்த தொடரில் இந்தியாவிற்கு கடுமையான சவாலை கொடுத்து தோற்கடிப்போம் என ஜிம்பாப்வே பயிற்சியாளர் மற்றும் சில வீரர்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தனர். ஆனால் சொன்னதுக்கு ஏற்றார்போல் களத்தில் செயல்பட தவறிய அந்த அணி சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கேஎல் ராகுல் தலைமையிலான 2வது தர இந்திய அணியை கட்டுப்படுத்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அந்த வகையில் வாயில் பேசாமல் இளம் வீரர்களுடன் களத்தில் அபாரமாக செயல்பட்ட இந்தியா இந்த தொடரை வெல்வதற்கு தகுதியான அணியாக கோப்பையை வென்றுள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Sanju Samson IND VS ZIM

ஆனால் இந்தியாவின் இந்த வெற்றியை பார்க்கும் நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி நிர்ணயித்த வெறும் 162 ரன்களை துரத்த 25 ஓவர்கள் எடுத்துக் கொண்டதற்காக சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். சொல்லப்போனால் வாயில்லாப் புள்ள பூச்சியான ஜிம்பாப்வேவை அடித்துவிட்டு இவ்வளவு பெருமை கூடாது என்று சில இந்திய ரசிகர்களே தேசப்பற்று இல்லாமல் பேசுகிறார்கள்.

- Advertisement -

கனேரியா பதிலடி:
ஆனால் இதுவே பாகிஸ்தானாக இருந்தால் அதில் விளையாடும் வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த 162 ரன்களை எட்டி பிடிக்க 50 ஓவர்கள் விளையாடி இருப்பார்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் ஜிம்பாப்வேக்கு எதிராக 162 ரன்களை துரத்தும் போது இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்ததாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்தியா அதிரடியாக விளையாடி இந்த போட்டியை பெறும் 25 ஓவர்களிலேயே பினிஷிங் செய்ததை பாராட்ட வேண்டும். இதுவே பாகிஸ்தானாக இருந்தால் இந்த இலக்கை துரத்த அவர்கள் 50 ஓவர்கள் விளையாடியிருப்பார்கள்” என்று கூறினார்.

Deepak-Hooda

அதேபோல் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி காயத்தால் விலகியதற்கு பாகிஸ்தான் அணி நிர்வாகம் தான் காரணம் என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். ஏனெனில் இந்த முக்கிய தொடருக்கு முன்பாக நடைபெற்ற இலங்கை தொடரில் தேவையின்றி அவரை விளையாட வைத்த பணிச்சுமையே காயத்துக்கு காரணம் என தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பையில் சாகித் அப்ரிடி வெளியேறியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும்”.

இதையும் படிங்க : IND vs ZIM : கேரியரின் ஆரம்பத்திலேயே அசத்தும் இந்திய வீரர் – உலகில் யாரும் படைக்காத வித்யாசமான உலகசாதனை

“ஏனெனில் தொடர்ச்சியாக விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள் காயம் அடைந்து விடுவார் என்று கடந்த ஒரு வருடமாகவே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். தற்போது கூறியது போல் அதுவும் பெரிய தொடருக்கு முன்பாக அவர் வெளியேறியுள்ளார். இலங்கை தொடரில் பாகிஸ்தான் அணி நிர்வாகம் அவரை கட்டாயம் விளையாட வைத்ததற்கு என்ற அவசியமும் கிடையாது. தொடர்ச்சியாக அவரை 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வைப்பது மிகப்பெரிய தவறாகும்” என்று கூறினார்.

Advertisement