IND vs ZIM : கேரியரின் ஆரம்பத்திலேயே அசத்தும் இந்திய வீரர் – உலகில் யாரும் படைக்காத வித்யாசமான உலகசாதனை

chahal deepak hooda IND vs IRE
- Advertisement -

ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும் ரியன் புர்ள் 39* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 162 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 1 ரன்னில் நடையை கட்டினார்.

IND vs ZIM Shikhar Dhawan

- Advertisement -

இருப்பினும் முதல் போட்டியில் 192 ரன்களை அசால்ட்டாக சேசிங் செய்த ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த இசான் கிசான் 6 ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். அதனால் 96/4 என தடுமாறிய இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தீபக் ஹூடா 25 ரன்கள் எடுத்து வெற்றி உறுதி செய்து அவுட்டானார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 43* (39) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 25.4 ஓவர்களிலேயே 167/5 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக வென்றது.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே வென்ற காரணத்தால் இந்த வெற்றியுடன் சேர்த்து 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை முன்னிலை பெற்றுள்ள இந்தியா முன்கூட்டியே கோப்பையை உறுதி செய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 43* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் மிடில் ஆர்டரில் முக்கியமான 25 ரன்களை சேர்த்த இளம் வீரர் தீபக் ஹூடா பந்து வீச்சில் வெறும் 2 ஓவரில் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக வெற்றிக்கு பங்காற்றினார்.

Hooda-2

அமர்க்களமான தொடக்கம்:
பரோடாவை சேர்ந்த இவர் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் போது கேப்டன் க்ருனால் பாண்டியா தம்மை கடுமையான சொற்களால் திட்டியதாக புகார் எழுப்பியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதை விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட பரோடா நிர்வாகம் இவருக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்க வாழ்நாள் தடை விதித்தது. அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த இவர் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் வெற்றி பெற வேறு வழியின்றி ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பதான் உதவியுடன் அம்மாநிலத்துக்காக விளையாடத் தொடங்கினார்.

- Advertisement -

அதில் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த பிப்ரவரியில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கலங்கிய கண்களுடன் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று ரன்கள் சேர்க்கும் திறமையும் பந்துவீச்சில் சஹால் போன்ற முதன்மை பவுலர்களுக்கு ஈடாக சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுக்கும் திறமையையும் வெளிப்படுத்தினார். அத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ அணிக்காக 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் அதன்பின் அயர்லாந்தில் நடந்த டி20 தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று சஞ்சு சாம்சன் உடன் 176 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து வெற்றி பெற வைத்தார்.

Deepak Hooda 104

புதிய உலகசாதனை:
அதை தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்திய அவர் அடுத்த தலைமுறை சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்து இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க துவங்கியுள்ளார். அடுத்ததாக ஆசிய கோப்பையில் விளையாட இடம் பிடித்துள்ள இவர் அதில் அசத்தும் பட்சத்தில் நேரடியாக டி20 உலக கோப்பையில் விளையாடவும் அதிக வாய்ப்புள்ளது. இப்படி ஆரம்பத்திலேயே அசத்தும் இவர் இந்தியாவுக்காக இதுவரை 9 டி20 போட்டிகளிலும் 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆச்சரியப்படும் வகையில் அந்த 16 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடையாமல் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற வரலாற்றில் வேறு எந்த வீரர்களும் படைக்காத வித்தியாசமான புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:

Deepak Hooda

1. தீபக் ஹூடா (இந்தியா) : 16*
2. சத்விக் நடிகோட்லா (ருமேனியா) : 15
3. டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்கா) : 13
4. சந்தானு வசிஸ்ட் (ருமேனியா) : 13

இதையும் படிங்க : 1 ரன்னில் ஆட்டமிழந்தால் என்ன? அவரோட ஒர்த் என்னனு எல்லாருக்கும் தெரியும் – முகமது கைப் ஆதரவு

இப்படி ஆரம்பத்திலேயே வித்தியாசமான உலக சாதனை படைத்துள்ள தீபக் ஹூடாவை அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்வதற்காக இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அசத்தலான கேரியரை துவங்கியுள்ள இவர் நீண்ட காலம் விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement