- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரோட இந்தியா முடிஞ்ச்சுன்னு நினைச்சோம்.. அவங்க எங்க திட்டத்தை உடைச்சுட்டாங்க.. வெட்டோரி ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபாவில் நடைபெறும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு கோலி, ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அதனால் 74-5 என தடுமாறிய இந்தியாவுக்கு முழுமூச்சுடன் போராடிய கேஎல் ராகுல் 84, ஜடேஜா 77 ரன்கள் அடித்து அவுட்டானார்கள். அதன் காரணமாக இந்தியா ஃபாலோ ஆன் சந்திக்குமோ என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடிய ஆகாஷ் தீப் 27*, ஜஸ்ப்ரித் பும்ரா 10* ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்கள்.

- Advertisement -

ஆஸியின் திட்டம்:

அதன் காரணமாக 4வது நாள் முடிவில் 252-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா குறைந்தபட்சம் இப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ளது. இந்நிலையில் ஜடேஜா அவுட்டானதும் இந்தியாவை விரைவாக சுருட்டி ஃபாலோ ஆன் கொடுத்து வெற்றி பெறலாம் என்று நினைத்ததாக ஆஸ்திரேலிய துணை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார். ஆனால் ஆகாஷ் – பும்ரா ஜோடி கடைசி நேரத்தில் தங்களது திட்டத்தை உடைத்து விட்டதாக அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடைசி நாளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி வெட்டோரி பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஃபாலோ ஆன் கொடுப்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. அதனால் கடைசி விக்கெட்டை எடுப்பதற்கு அதிகப்படியான ஆர்வம் இருந்தது”

- Advertisement -

தப்பிய இந்தியா:

“அதற்கு ஜடேஜா அவுட்டானதும் நல்ல வாய்ப்பு இருந்ததாக நாங்கள் நினைத்தோம். ஆனால் பும்ரா – ஆகாஷ் ஆகியோரிடம் உண்மையான போராட்டம் இருந்தது. துரதிஷ்டவசமாக மழை காரணமாக ஆட்டத்தில் நிறைய நேரம் இழக்கப்பட்டுள்ளது. அதனால் வெற்றி கிடைப்பது மிகவும் கடினம். இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் அடித்த ரன்கள் எப்போதும் முக்கியமாக இருக்கும்”

இதையும் படிங்க: இந்தியாவுக்காக இதயத்தை கொடுத்த ஆகாஷ் – பும்ரா.. இந்த பெரிய விஷயத்தை திருப்பிட்டாங்க.. ராகுல் பேட்டி

“ஆனால் மழைக்கு எதிராக உங்களால் எந்த திட்டமும் வகுக்க முடியாது. அதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து இந்த பிட்ச்சில் நன்றாக பவுலிங் செய்து வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் எங்களுடைய அணியில் பேசினோம்” எனக் கூறினார். மொத்தத்தில் இந்தப் போட்டி பெரும்பாலும் டிராவில் முடிவடைவதற்கே வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -