இந்தியாவுக்காக இதயத்தை கொடுத்த ஆகாஷ் – பும்ரா.. இந்த பெரிய விஷயத்தை திருப்பிட்டாங்க.. ராகுல் பேட்டி

KL rahul 2
- Advertisement -

காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேப்டன் ரோஹித், ரிஷப் பண்ட் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

அதனால் 74-5 என தடுமாறிய இந்தியாவுக்கு ராகுல் 84, ஜடேஜா 77 ரன்கள் குவித்து கடுமையாக போராடி ஆட்டமிழந்தார்கள். அப்போது ஃபாலோ ஆன் தவிர்க்க கடைசி விக்கெட்டுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டதால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார். ஆனால் அப்போது பும்ரா 10*, ஆகாஷ் தீப் 27* ரன்கள் எடுத்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்கள்.

- Advertisement -

இந்தியாவுக்காக இதயம்:

இந்நிலையில் பும்ரா – ஆகாஷ் ஆகியோர் இந்தியாவுக்காக இதயத்திலிருந்து விளையாடியதாக கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார். மேலும் இந்த போராட்டம் அடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றும் தன்னம்பிக்கையை இந்தியாவுக்கு கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “லோயர் ஆர்டர் ரன்கள் குவிப்பதை பார்ப்பது நன்றாக உள்ளது”

“எங்களுடைய பவுலர்கள் பவுலிங் போலவே பேட்டிங் செய்வதற்கும் கடின பயிற்சிகளை எடுக்கிறார்கள். அது இன்று அவர்களது வழியில் சென்று ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டுள்ளதை பார்ப்பது நன்றாக உள்ளது. பெரும்பாலான போட்டி மழையால் இழக்கப்பட்டுள்ள நிலையில் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரிய மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்”

- Advertisement -

இந்தியா மீண்டு வரும்:

“மழை பொழியக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் போட்டியில் நிற்கும் வழியை கண்டறிய வேண்டியிருந்தது. அதை பும்ரா – ஆகாஷ் செய்து எங்களுடைய நாளை நன்றாக முடித்தார்கள். ரன்கள் அடித்தது மட்டுமின்றி அவர்கள் தங்களுடைய இதயத்திலிருந்து பவுன்சர் பந்துகளை தவிர்த்து தடுப்பாட்டம் விளையாடி சில நல்ல ஷாட்டுகளையும் அடித்தார்கள். அது அணியாக எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது”

“213-9 என்ற நிலையில் இருந்த போது ஃபாலோ ஆன் பெறுவோம் என்று நினைத்ததால் மீண்டும் பேட்டிங் செய்ய நான் தயாரானேன். ஆனால் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் சரியாக பேட்டிங் செய்து கை கொடுத்தார்கள். அந்த சூழ்நிலையில் மிகவும் எளிதாக இருந்து ரன்கள் அடிக்க முயற்சிக்க வேண்டும். பவுண்டரியை முயற்சிக்காமல் சிங்கிள் அடித்தாலே ரன்கள் வரும்”

இதையும் படிங்க: ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ஹிட்மேன்? அவுட்டானதும் ரோஹித் செய்த செயலால் – ரசிகர்கள் யூகம்

“குறிப்பாக ஆஸ்திரேலியா ஃபீல்டிங்கை விரித்து வைத்திருந்தார்கள். அப்போது ஆகாஷ் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் அவசரப்படாமல் கொஞ்சம் அமைதியாக இருந்து விளையாடுங்கள் என்று நாங்கள் மெசேஜ் கொடுத்தோம். 5 – 6 ரன்கள் எடுத்தாலே ஃபாலோ ஆன் தவிர்த்து விடலாம் என்ற சூழ்நிலை அப்போது இருந்தது” எனக் கூறினார்.

Advertisement