155 கி.மீ வேகத்தை விட.. ஆல் இன் ஆல் பும்ரா மாதிரி இதை செய்றவங்க தான் தங்கமான பவுலர்ஸ்.. ஸ்டைன் பேட்டி

Dale Steyn
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தி வருகின்றன. ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 250 ரன்கள் அடிப்பதே மிகவும் கடினமான ஒன்றாக அறியப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் டி20 போட்டிகளின் வருகையால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அசால்டாக 200 – 250 ரன்கள் அடிப்பதைப் பார்க்க முடிகிறது. அதன் காரணமாக இப்போதெல்லாம் பெரும்பாலான பவுலர்கள் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு மத்தியிலும் சில பவுலர்கள் தங்களது திறமையால் நல்ல லைன், லென்த் ஆகியவற்றைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து அசத்தி வருகின்றனர். அதற்கு இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் மிகவும் துல்லியமாக பௌலிங் செய்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வேண்டிய அவசியமில்லை என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார். மாறாக பும்ரா, காகிஸோ ரபாடா ஆகியோரைப் போல் தேவையான வேகத்தில் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தங்கங்கள் என்று அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஸ்டைன் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டின் வருகையால் நமது விளையாட்டு பெருமளவு மாறியுள்ளது. பேட்ஸ்மேன்கள் இப்போதெல்லாம் அதிரடியான அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள். எனவே டி20 கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருந்ததை வைத்து விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களை நான் எதிர்பார்க்கிறேன். ஜஸ்ப்ரித் பும்ரா போன்றவரை பாருங்கள்”

- Advertisement -

தங்கமான பவுலர்கள்:

“அவர் ஆல் இன் ஆல் பேக்கேஜ் போன்றவர். ரபாடாவும் அதே போன்றவர். அவர்கள் போட்டியின் எந்த நேரத்திலும் வந்து விக்கெட்டை எடுத்து வெற்றியை மாற்றக்கூடிய திறன் கொண்டவர்கள். அது போன்ற வீரர்கள் தங்கத்தைப் போன்றவர்கள். எனவே அவர்களைப் போன்ற பவுலர்களை உங்களால் உருவாக்க முடிந்தால் நமது வேகப்பந்து வீச்சின் பங்கு கிரிக்கெட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை உங்களால் பார்க்க முடியும்”

இதையும் படிங்க: எனக்கு குடுத்த அந்த ஆதரவு இவருக்கும் தாங்க.. ரசிகர்கள் மத்தயில் பட்டிதாருக்கு ஆதரவாக பேசிய – விராட் கோலி

“இந்த நாட்களில் நீங்கள் 155 கிலோமீட்டர் வேகத்தில் வீச வேண்டும் அல்லது 10 வெவ்வேறு திறமையை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுடைய கேப்டனுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து போட்டியை உடைக்க வேண்டும் அவ்வளவு தான்” என்று கூறினார். அந்த வகையில் தங்கமான பும்ரா தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை தவற விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement