நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் கொல்கத்தா நகரில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளின் கேப்டன்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் அதில் 5 அணிகள் புதிய கேப்டன்களை நியமித்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது.
எனக்கு தந்த ஆதரவை பட்டிதாருக்கு தாங்க : விராட் கோலி
அந்த வகையில் கடந்த ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த டூபிளெஸ்ஸிஸ் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு சென்றதால் பெங்களூரு அணி புதிய கேப்டனை நியமித்துள்ளது. அந்த வகையில் விராட் கோலி தான் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று பலரும் பேசி வந்தனர்.
ஆனால் விராட் கோலி தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் தான் ஒரு வீரராகவே அணியில் தொடர விரும்புவதாக கூறிவிட்டார். இதன் காரணமாக பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக இளம் ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கேப்டன் அறிமுக நிகழ்ச்சியில் ரஜப் பட்டிதாரை அறிமுகப்படுத்தி விராத் கோலி பேசியிருந்தார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக வரப்போகும் இவர் இன்னும் பல ஆண்டுகள் அணியை வழிநடத்துவார். ஒரு கேப்டனாக நான் செயல்பட்ட போது எனக்கு ஆதரவை வழங்கிய ரசிகர்கள் அனைவரும் இவருக்கும் ஆதரவு வழங்க வேண்டும். ரஜத் பட்டிதார் உண்மையிலேயே திறமையான வீரர் அவர் நிச்சயம் அணியை சிறப்பாக வழி நடத்துவார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
எங்கள் அணியில் தற்போதுள்ள வீரர்கள் மிகச் சிறப்பாக உள்ளதால் இந்த தொடரில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறேன். இளமையும் திறமையும் கலந்த இந்த அணியில் இணைந்து அவர்களுடன் விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நான் பெங்களூரு வந்து விளையாடி வருகிறேன். மீண்டும் இந்த அழகான நகரத்திற்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என விராத் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 13.1 ஓவரில் 137.. 16க்கு 11 ஜிம்பாப்வேவை தாண்டி ஃசெல்ப் எடுக்காத பாகிஸ்தான்.. அப்ரிடியை நொறுக்கி நியூஸி வெற்றி
இந்த தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியானது மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா நகரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருகின்றனர். இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



