- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் மாதிரி.. டி20யில் இதை செய்ய வெறும் 5 பந்துகள் போதும்ன்னு அர்ஷ்தீப் காமிச்சுட்டாரு.. ஸ்டைன் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி தரம்சலாவில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஐடன் மார்க்ரம் 61 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன்களை குவித்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 35, சுப்மன் கில் 28, திலக் வர்மா 25* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்கள். இந்த வெற்றியால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 – 1* என்ற கணக்கில் இந்திய அணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

5 பந்தில் விக்கெட் எடுக்கலாம்:

இந்த வெற்றிக்கு பந்து வீச்சு துறையில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 7 ஒய்டு போட்டுத்தள்ளிய அவர் 13 பந்துகளை வீசி மோசமான உலக சாதனை படைத்தார். ஆனால் அதற்காக அசராத அவர் இப்போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்து ஆட்டநாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக முதல் ஓவரை வீசிய அவர் தென்னாப்பிரிக்காவின் துவக்க வீரர் ரிசா ஹென்றிக்ஸை 4வது பந்தில் டக் அவுட்டாக்கினார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனை செட்டாக்கி அவுட்டாக்க 4 முதல் 5 ஓவர்கள் தேவைப்படும் என்று ஜாம்பவான் டேல் ஸ்டைன் செய்து தெரிவித்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனை அவுட்டாக்குவதற்கு அதிகபட்சம் 5 பந்துகள் போதும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

காண்பித்த அர்ஷ்தீப்:

அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் காண்பித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி டேல் ஸ்டைன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக நீங்கள் வேலை செய்து அவுட்டாக்குவதற்கு 4 – 5 ஓவர்கள் தேவைப்படும். அதுவே டி20 கிரிக்கெட்டில் நீங்கள் 3 – 5 பந்துகளில் வேலையை முடிக்க முடியும்”

இதையும் படிங்க: 3 முறை முதல் பந்திலேயே 3 சிக்ஸ்.. அபிஷேக் சர்மா அரிதான உலக சாதனை.. ரோஹித்தை முந்தி அபாரம்

“அதை எப்படி கச்சிதமாக செய்ய முடியும் என்பதை அர்ஷ்தீப் சிங் காண்பித்துள்ளார்” என்று கூறியுள்ளார். அப்படி தென்னாப்பிரிக்கா ஜாம்பவானின் பாராட்டை பெறும் அளவுக்கு அசத்திய அர்ஷ்தீப் இந்தியாவுக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். இருப்பினும் அவருக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 100% தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -