3 முறை முதல் பந்திலேயே 3 சிக்ஸ்.. அபிஷேக் சர்மா அரிதான உலக சாதனை.. ரோஹித்தை முந்தி அபாரம்

Abhishek Sharma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் 2 போட்டிகளின் முடிவில் சமநிலைப் பெற்ற அத்தொடரின் 3வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தரம்சாலாவில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஐடன் மார்க்ரம் 61 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் 120/3 ரன்களை அடித்து வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 35, சுப்மன் கில் 28, திலக் வர்மா 25* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

முதல் பந்தில் 3 சிக்ஸர்கள்:

அதனால் 2 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரில் இந்திய அணி மீண்டும் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக அப்போட்டியில் 118 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா முதல் ஓவர எதிர்கொண்டார். அந்த ஓவரில் லுங்கி நிகிடி வீசிய முதல் பந்தை அவர் ஃபைன் லெக் திசைக்கு மேலே அட்டகாசமான சிக்ஸராக அடித்து அமர்க்களப்படுத்தினார்.

இது போக 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஹைதர் அலி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்ஸர் அடித்தார். அதே தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலும் அபிஷேக் சிக்சரை பறக்க விட்டிருந்தார். அந்த வகையில் இதுவரை அபிஷேக் ஷர்மா 3 முறை முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார்.

- Advertisement -

அரிதான சாதனை:

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 முறை ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற அரிதான உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் ரோகித் சர்மா, கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்டில் போன்ற நிறைய வீரர்கள் ஒருமுறை மட்டுமே முதல் பந்தில் சிக்சர் அடித்துள்ளார்கள். குறிப்பாக இந்தியாவுக்காக 2021 அகமதாபாத் போட்டியில் இங்கிலாந்தின் அடில் ரசித்துக்கு எதிராக ரோஹித் சர்மா முதல் பந்தலேயே சிக்சர் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 2வது வீரராக அந்த சாதனை படைச்சது எனக்கே தெரியாது.. இந்தியா கம்பேக் கொடுக்க இதான் காரணம்.. வருண்

2024 ஹராரே டி20 போட்டியில் ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராசாவுக்கு எதிராக இந்தியாவின் ஜெய்ஸ்வால் முதல் பந்தில் சிக்சர் அடித்துள்ளார். 2025 மும்பை வான்கடே போட்டியில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக சஞ்சு சாம்சன் முதல் பந்தில் சிக்சர் அடித்துள்ளார். ஆனால் அபிஷேக் மட்டுமே 3 முறை முதல் பந்தில் சிக்ஸர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement