2வது வீரராக அந்த சாதனை படைச்சது எனக்கே தெரியாது.. இந்தியா கம்பேக் கொடுக்க இதான் காரணம்.. வருண்

Varun Chakravarthy 2
- Advertisement -

தரம்சாலாவில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஐடன் மார்க்ரம் 61 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் 120/3 ரன்களை எடுத்து வென்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 35, சுப்மன் கில் 28, திலக் வர்மா 25* ரன்கள் எடுத்தனர். அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் மீண்டும் முன்னிலை பெற்று இந்திய அணி அசத்தத் துவங்கியுள்ளது.

- Advertisement -

50 விக்கெட்ஸ் சாதனை:

முன்னதாக இப்போட்டியில் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது வேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி சாதனை படைத்தார். இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் 30 இன்னிங்சில் 50 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 32 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகள் எடுத்து சக்கரவர்த்தி சாதனை படைத்துள்ளார்.

அது பற்றி தமக்கு தெரியாது என்று தெரிவிக்கும் சக்கரவர்த்தி கடந்தப் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பின் இந்திய அணி மீட்டிங் போட்டு பேசியதாக கூறியுள்ளார். அதில் முன்னேற வேண்டிய விஷயங்களை விவாதித்த இந்திய பவுலர்கள் தங்களது திட்டங்களை சரியாக பின்பற்றியதே இப்போட்டியில் கம்பேக் கொடுத்து வெல்வதற்கு காரணம் என்றும் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கம்பேக் வெற்றி:

“அந்த சாதனை பற்றி உண்மையில் எனக்குத் தெரியாது. என்னிடம் அதைச் சொன்னதற்கு நன்றி. பிட்ச் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக அது கடினமாகவே இருந்தது. இவ்வளவு குளிரில் தரம்சாலா மைதானத்தில் இதற்கு முன் நான் விளையாடியதில்லை என்பதால் எனக்கு சூழ்நிலைகள் சவாலாக இருந்தது. இது போன்ற வானிலை சென்னையில் எப்போதும் இருக்காது. கடந்த போட்டிக்கு பின் நாங்கள் முறையான பவுலிங் மீட்டிங் போட்டு நேர்மையுடன் பேசினோம்”

இதையும் படிங்க: இதை செஞ்சுருந்தா இந்தியாவை வீழ்த்திருப்போம்.. அவங்களோட சேந்து அபிஷேக் வெற்றியை பறிச்சுட்டாரு.. மார்க்ரம் பேட்டி

“எது தவறாக சென்றது என்பதைக் கண்டறிந்த நாங்கள் சரியான அணுகு முறையில் கவனம் செலுத்தினோம். எனவே பாராட்டு எங்களுடைய நிர்வாகம் மற்றும் பவுலர்களுக்கு செல்ல வேண்டும். இருதரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை வேலை செய்தது. என்னுடைய பலத்தில் நான் நிற்க விரும்புகிறேன். இன்று பந்து சுழல்வதற்கு பதிலாக அதிகமாக வழுக்கியது. எனவே சுழலில் அதிகம் கவனம் செலுத்தாத நான் வழுக்கிக்கொண்டு சென்ற பந்துகளில் கவனம் செலுத்தினேன். 2வது வேகமான 50 விக்கெட்டுகள் எடுத்தது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடி விக்கெட்டுகள் எடுக்கும் வரை நான் நன்றாக உணர்வேன்” என்று கூறினார்.

Advertisement