இதை செஞ்சுருந்தா இந்தியாவை வீழ்த்திருப்போம்.. அவங்களோட சேந்து அபிஷேக் வெற்றியை பறிச்சுட்டாரு.. மார்க்ரம் பேட்டி

Aiden markram 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 3வது டி20 போட்டி தரம்சாலாவில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 117 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஐடன் மார்க்ரம் 61 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் 120/3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 35, திலக் வர்மா 25*, சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் மீண்டும் இத்தொடரில் முன்னிலை பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

அபிஷேக் அதிரடி:

இந்நிலையில் இப்போட்டியில் பிட்ச் மற்றும் சூழ்நிலைகள் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்ததாக தெனாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். அது போன்ற சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் எடுத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கும் என்று அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். அதே போல பந்து வீச்சில் பவர்பிளேவுக்கு பின் தங்களுடைய பவுலர்கள் சரியாக பவுலிங் செய்ததாகவும் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா 35 (18) ரன்கள் எடுத்தது தங்களது வெற்றியைப் பறித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய பவுலர்கள் மற்றும் அபிஷேக் சர்மா தங்களை தோற்கடித்தது பற்றி மார்க்ரம் பேசியது பின்வருமாறு. “கடினமான சூழ்நிலைகள். நீங்கள் 4 – 5 விக்கெட்டுகள் இழந்து விட்டீர்கள் என்று உணர்வதற்கு முன் இந்திய பவுலர்கள் சரியான இடங்களில் பந்தை வீசினார்கள்”

- Advertisement -

மார்க்ரம் கருத்து:

“ஒருவேளை எங்களுக்கும் அதே போன்ற சூழ்நிலைகள் கிடைத்திருந்தால் நாங்களும் அழுத்தத்தைத் திருப்பி போட்டிருப்போம். எனவே அவர்களுக்கு பாராட்டுக்கள். அவர்கள் எங்களுக்கு ஸ்கோர் செய்வதற்கான அதிக வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை. நான் முடிந்தளவு போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல விரும்பினேன். எப்படியாவது நாங்கள் 140 – 150 ரன்கள் அடித்திருந்தால் போட்டி இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும் என்று நான் நினைத்தேன்”

இதையும் படிங்க: நான் ஃபார்ம் அவுட்டாகல.. 3வது டி20யில் இந்தியா ஜெய்க்க இதான் காரணம்.. கேப்டன் சூரியகுமார் பேட்டி

“டெத் ஓவர்களில் எனக்கு நானே ஆதரவு கொடுத்து விளையாடினேன். அதற்கு நீங்கள் சரியான பவுலரை தேர்ந்தெடுத்து அடிப்பது முக்கியம். சில நேரங்களில் பொருத்தமான பவுலர்கள் வரும் போது நீங்கள் அடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அபிக்கு பாராட்டுக்கள். நாங்கள் முதல் 3 – 4 ஓவர்களில் சரியான இடங்களில் பந்தை வீசவில்லை” என்று கூறினார்.

Advertisement